காங்கிரஸ் தோற்றது ஏன் தெரியுமா.. இனி நம் பாதை இதுதான்.. மாணிக்கம் தாகூர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. இதில் காங்கிரஸ் தவெக கூட்டணியில் பிடித்துள்ளது. இத்தனை நாள் காங்கிரஸ் ஏன் தோல்வியடைந்தது, தவெகவுடன் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை பற்றி மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "நம்முடைய பலத்தை அறியாததால் தான் அரசியலில் தோல்வியடைகிறோம். நம்முடைய அட்வான்டேஜ் என்ன என்பதை தெரிந்துகொள்வதில்லை. அதனால் கூட்டணி கட்சிகளின் அதிகாரத்தை பார்த்து கேட்டு கொண்டிருக்கிறோம். விதி இப்போது மாறிவிட்டது. கடைசியாக சாவியை திறப்பதற்கு நம்மிடம் 5 பேர் இருந்தனர். பெரிய மண்டபம் திறக்க சாவி தேவை.

this-the-reason-for-congress-loss-said-manickam-tagore

இது நம்முடைய ஆட்சி

அந்த சாவிக்கு இந்த நம்முடைய 5 எம்எல்ஏக்கள் வேண்டும் என்கிற நிலையாகிவிட்டது. 5 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முதல் முடிவை எடுத்தோம். அதனால் இந்த ஆட்சியில் நாம் பங்கெடுத்துள்ளோம். நம்முடைய 2 அமைச்சர்கள் விஸ்வநாத், ராஜேஷ்குமார் இடம்பெற்றுள்ளனர். 2 அமைச்சர்களையும் வாரம் ஒரு நாளாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளேன். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஏதாவது கிழமைகளில் ஒரு நாள் அலுவலகத்திற்கு வர கேட்டுள்ளேன்.

அதன்படி புதன்கிழமை விஸ்வநாதனும், வியாழக்கிழமை ராஜேஷ்குமாரும் காங்கிரஸ் அலுவலகம் வருகிறோம் என்று சொல்லியுள்ளனர். நாம் என்ன அடுத்தவன் சொத்தையா ஆட்டையை போடப் போகிறோம். நம் சொத்தையே நாம் காப்பாற்ற முடியாமல் அடுத்தவன் ஆட்டையை போடுகிறான். நம்முடைய காங்கிரஸ் குடும்பங்களில் அட்மிஷன், ஆஸ்பத்திரி போன்ற கோரிக்கைகளுக்கு நம் அமைச்சர்களிடம் கேளுங்கள். நாம் ஆட்சியில் இருப்பதை மறந்துவிட வேண்டாம்.

இனிமேல் இப்படித்தான்

இது நம்முடைய கூட்டணி ஆட்சி. நாம் மரியாதையாக நண்பர்களாக நடந்து கொள்வோம். தவெக இளைஞர்களால் ஆன கட்சி. முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். நேர்மையான ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது காமராஜர் ஆட்சி தான். அதற்கு பிறகு வந்த ஆட்சிகள் எல்லாம் நேர்மையான ஆட்சிகள் இல்லை. மீண்டும் நேர்மையான ஆட்சியை கொண்டு வருவோம் என்கிறார்கள்.

59 வருடங்களுக்கு பிறகு க்ளீன் கவர்ன்மென்ட் வந்துள்ளது. எங்கும் லஞ்சம் கேட்பதில்லை என்று பேசுகிறார்கள். அதனால் தான் காமராஜரின் பிறந்தநாளை லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமர் என்று கொண்டாடுகிறோம். நம் இயக்கம் நல்லவர்களால், அப்பாவிகளால், நேர்மையானவர்களால் உருவாகியுள்ளது. அந்த நேர்மை தான் இப்போது போற்றப்படும். முதலில் நிறைய நல்லவர்கள் இருப்பார்கள். இப்போது நல்லவர்களை தேட வேண்டியுள்ளது. நாம் செய்த விஷயங்கள் போற்றப்படும். காங்கிரஸ் 2.0 வாக பலமடைவோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+