இலங்-கைப் பிரி-வி-னை: "க-ரு-ணா-நி-தி க-ருத்-து அர-சு விரோ-த-மா-ன-து
சென்னை:
இலங்கைப் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செக்கஸ்லொவேக்கியா பாணியிலான தீர்வு என்பது அரசின் கொள்கைக்கு விரோதமானதுஎன்று த.மா.கா முண்ணனித் தலைவரும்,முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:
இலங்கைப் பிரச்சனைக்குத் தான் சொன்ன தீர்வே சரி என்று முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி இருப்பது மிகுந்த வியப்பளிக்கிறது.
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியது ஏதோ மேலெழுந்தவாரியாகச் சொன்ன யோசனை என்று நினைத்தவர்கள் கூட, அவருடையகருத்து ஒரு அரசியல் நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்ட கருத்து என்று சந்தேகப்படுகிறார்கள்.
செக்கஸ்லோவேக்கியா நாட்டின் 90 ஆண்டு கால வரலாற்றை முதல்வர் கவனமாக படிக்க வேண்டும். ஆஸ்திரியா - ஹங்கேரி சாமாராஜ்யம்வீழ்ச்சியடைந்த பிறகு 1918-ல் அந்த நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டது. செக் மக்கள் வாழ்ந்த பகுதிகளும், ஸ்வோலாக் மக்கள் வாழ்ந்தபகுதிகளும் ஜெர்மன் மற்றும் ஹங்கேரி மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கட்டாயமாக இணைக்கப்பட்டு ஒரு புது நாடு உருவாக்கப்பட்டது.
1938-ம் ஆண்டு மூயூனிக் ஒப்பந்தம், 1939-ல் ஸ்லோவாக் பகுதிகளுக்குச் சுதந்திரம், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு மீண்டும்செக்கஸ்லோவேக்கியா என்ற ஒரு நாடு (ருத்தேனியா பகுதி நீங்கலாக), 1968-ல் கம்யூனிஸ அரசை எதிர்த்துப் புரட்சி, 1989-ல் கூட்டணி அரசு,1990-ல் சுதந்திரமாக தேர்தல், 1992-ல் தேர்தலில் இரு பகுதிகளிலும் இரு வேறு கட்சிகளின் வெற்றி என்ற வரலாற்றுப் பாதையின் கடைசிமைல் கல்தான் 1.1.1993ம் நாள் 2 முதல் செக் நாடு என்றும் ஸ்லோவாக் நாடு என்றும் ஏற்பட்ட பிரிவினை.
இலங்கையின் வரலாற்றை மேற்கூறிய வரலாற்றுடன் ஒப்பிட முடியுமா? இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் தனி நாடுகளாக இருந்து பிறகுகட்டாயமாக ஒரு நாட்டு மக்களாக உருவாக்கப்படவில்லையே? யாழ்ப்பாணம் (ஈழம்) பகுதியில் மட்டும் தமிழர்கள் வாழவில்லை. பல லட்சம்தமிழர்கள் பல தலைமுறைகளாகத் தேயிலைத் தோட்டங்களிலும், சிங்களர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்களே.
தேயிலைத் தோட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் வாழுகின்ற தமிழர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் பிரதிபலிக்கவில்லை என்பது எல்லோரும்ஏற்றுக் கொண்ட உண்மைதானே?
முதல்வரின் பேச்சை நியாயப்படுத்தும் சட்ட அமைச்சர் ஆலடி அருணா அயர்லாந்து பிரியவில்லையா? வங்கதேசம் பிரியவில்லையா என்று கேட்டிருப்பதுநகைப்புக்குரியது. நல்லவேளை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியா பிரியவில்லையா என்று கேட்காதவரை அவருக்கு நன்றி.
இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற்ற குடிமக்களாக வாழ வேண்டும் என்பதில்யாருக்கும் கருத்து மாறுபாடில்லை.
தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒரு மாநிலமாகவோ, அல்லது இரண்டு மாநிலங்களாகவோ அறிவித்து அவர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி அளிக்கவேண்டும் என்பதே 1986 முதல் இந்திய அரசின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.
தெற்-காசியாவின் அரசியல், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள், இந்திய அரசியலில் இலங்கையின் தாக்கம் ஆகிய எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு இந்திய அரசு உருவாக்கியுள்ள இலங்கைக் கொள்கையிலிருந்து முதல்வரின் புதிய யோசனை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அதுவுமின்றி,ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் நிலைபாட்டிற்கும், முதல்வரின் புதிய யோசனைகளக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்று சொல்வதும், இலங்கை பிரிய வேண்டும் என்று சொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறான யோசனைகள்.
பிறந்தநாள் விழாவில் பேசியது இந்திய அரசுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அந்த பேச்சை மறந்துவிடுங்கள் என்று முதல்வர் அறிவிப்பதுதான்அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அவர் பங்கு பெறும் கூட்டணி அரசுக்கும் பொருத்தமாக இருக்கும் என்-று அவர் கூறி-யுள்-ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications