தமிழகத்தில் இன்று
ஜூ-ன்07, 2000
பாஞ்சாலி சபதம்
5. துரியோதனன் பொறாமை
(தொடர்ச்சி)
நால்வகைப் பசும்பொன்னும் - ஒரு
நாலா யிரவகைப் பணக்கு வையும்
வேல்வகை வில்வகையும் - அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகையும்
சூல்வகை தடிவகையும் - பல
தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவை த்தே
பால்வளர் மன்னவர் தாம் - அங்குப்
பணித்ததை என்னுளம் மறந்திடுமோ? (24)
கிழவியர் தபசியர் போல் - பழங்
கிளிக்கதை படிப்பவன் பொறுமையென் றும்
பழவினை முடிவென் றும் - சொலிப்
பதுங்கிநிற் போன், மறந் தன்மையி லான்,
வழவழத் தருமனுக் கோ - இந்த
மாநில மன்னவர் தலைமைதந்தார் - புவி
முழுதையும் தனியே குடிகொண் டான் (25)
தம்பியர் தோள்வலி யால் - இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்துது வும்,
வெம்பிடு மதகரி யான் - புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்,
அம்புவி மன்னரெ லாம் - இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம் - இவன்
நலங்கினர் சபையினில் பொழிந்தது வும், (26)
எப்படிப் பொறுத்திடு வேன்? - இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ?
குப்பை கொலோமுத் தும்? - அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய் தார்
சிப்பியும் பவளங்க ளும் - ஒளி
திரண்டவென் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பிலவை டூரியமும் - கொடுத்து
ஒதுங்கி நின்றான் இவன் ஒருவனுக்கே (27)
மலைநா டுடைய மன்னர் - பல
மான் கொணர்ந்தார், புதுத் தேன்கொணர்ந்தார்,
கொலைநால் வாய்கொணர்ந்தார் - மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்
கலைமான் கொம்புகளும் - பெருங்
களிறுடைத் தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும் - கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கி நின் றார் (28)
செந்நிறத் தோல், கருந் தோல் - அந்த
திருவளர் உதவியின் தோலுட னே
வெந்நிறப் புலித்தோல் கள் - பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்,
பன்னிற மயிருடைகள் - விலை
பகரரும் பறவைகள், விலங்கினங் கள்,
பொன்னிறப் பாஞ்சாலி - மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள். (29)
ஏலங் கருப்பூ ரம் - நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை,
கோலம் பெறக் கொணர்ந் தே - அவர்
கொட்டி நின்றார் , கரம் கட்டி நின்றார்,
மேலுந் தலத்திலுள் ளார் - பல
வேந்தர் அப்பாண்டவர் விழைந்திடவே
ஓலந் தரக் கொணர்ந் தே - வைத்த
தொவ்வொன்றும் என் மனத் துறைந்ததுவே (30)
மாலைகள் பொன்னும்முத் தும் - மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்
சேலைகள் நூறுவன் னம் பல
சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய்,
சாலவும் பொன்னிழைத் தே - தெய்வத்
தையலர் விழைவன பலர் கொணர்ந் தார்
கோலநற் பட்டுக்க ளின் - வகை
கூறுவதோய எண்ணில் ஏறுவ தோ? (31)
சுழல்களும் கடகங் ளும் - மணிக்
கவசமும் மகுடமும் கணக்கில வாம்
நிழல்நிறப் பரிபல வும் - செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல்நிறம்மேக நிறம் - விண்ணில்
சாரும் இந்திரவில்லை நேரும்நிறம்
அழகிய கிளிவயிற் றின் - வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய். (32)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications