ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ரூ. 1700 கோடியில் சென்னையில் கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டம்
கோவை:
சென்னையில் கழிவு நீரைச் சுத்திகரிக்க ரூ. 1700 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதிலும் 168 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் மழைநீரைத் தேக்கிவைக்க குளங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கழிவு நீரைச் சுத்திகரிக்க ஆயிரத்து 700 கோடியில் மத்திய அரசு திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின்ஒப்புதலுக்காக வைக்கப்படும்.
காவிரி ஆற்றை, நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் காவிரி நீர் மாசுபடுவதைத் தடுக்கமுடியும். மேலும் இத்திட்டத்தின் கீழ் வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்வேன்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப் புறங்களில் மரங்களைப் பாதுகாக்க சமுதாயமரம் வளர்ப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக 168 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ளஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு குளம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் மரம் வளர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், 7லட்சத்து 77 ஆயிரத்து 777 மரங்கள் நடப்படும் என்றார்.
பின்னர் காளப்பட்டியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் சந்தானம், தமிழகமாசுக்கட்டுப்பாடு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications