தமிழகத்தில் இன்று
ஆந்திரம், கர்நாடகத்தில் 3 சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு
ஹைதராபாத்:
ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒரே நாளில் மூன்று கிறிஸ்தவ சர்ச்சுகளில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் தெடபல்லிகுடம் ஆகிய நகரங்களில் இரு சர்ச்சுகளில் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் இரண்டு குண்டுகள்வெடித்தன.
பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள 114 வருட பழமை வாய்ந்த பாப்டிஸ்ட் சர்ச்சில் முதல் குண்டு வெடித்தது. அப்போதுதான் காலை பிரார்த்தனைமுடிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சர்ச்சை விட்டு வெளியேறியிருந்தனர். நான்கு பேர் மட்டுமே அப்போது சர்ச்சில் இருந்தனர். அவர்களில் ஒருவருக்குலேசான காயம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட இதே நேரத்தில், தெடபல்லிகுடம் நகரில் ஒரு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சில் ஒரு குண்டு வெடித்தது. குண்டு வெடித்தபோதுசர்ச்சில் யாரும் இல்லை. இந்த குண்டுவெடிப்பில் சர்ச் கண்ணாடி, ஜன்னல்கள் சேதமடைந்தன.
இரு சர்ச்சுகளில் குண்டு வெடித்த தகவல் அறிந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக இரு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.
கடந்த 15 நாட்களில் சர்ச்சுகளில் குண்டு வெடிப்பு நிகழ்வது இது நான்காவது முறையாகும். மசிலிப்பட்டனத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 30 பேர்காயமடைந்தனர். இதேபோல, விக்ராபாத், மேடக் பகுதி சர்ச்சுகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடந்தன.
கர்நாடகத்திலும் குண்டுவெடிப்பு:
கர்நாடகத்திலும் வியாழக்கிழமை ஒரு சர்ச்சில் குண்டுவெடித்தது. குல்பர்கா மாவட்டம், வாடி நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில்,வியாழக்கிழமை காலை இரண்டு குண்டுகள் வெடித்தன.இதில் சர்ச்சின் கண்ணாடி, ஜன்னல்கள் உடைந்தன.
காலை 6.15 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. இதில்இரண்டு ஷட்டர்கள் சேதமடைந்தன. பிறகு 9 மணிக்கு மற்றொரு குண்டு வெடித்தது. அப்போது முதல்குண்டு வெடித்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். யாருக்கும் இதனால் காயமேற்படவில்லை.
ஜெலட்டின் குச்சிகளால் ஆன குண்டுகளாக இவை இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளுக்கான பின்னணி குறித்துத் தெரியவில்லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications