தமிழகத்தில் இன்று
கொழும்பு:
விடுதலைப் புலிகள் வசம் உள்ள ராணுவ வீரர்கள் குறித்தும், காணா-மல் போன ரா-ணு-வ வீரர்--கள் கு-றித்-தும் தகவல் சேகரிக்க புதிய இன்டர்நெட்தளத்தை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது.
1983-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள், தனி ஈழம் கோரி போராடி வருகின்றனர். இந்தப் போரில் பல ராணுவ வீரர்கள், புலிகளிடம்பிடிபட்டுள்ளனர். இவர்கள் குறித்த விவரம் தெரியாமல் இலங்கை அரசும், ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.
தற்போது, விடுதலைப் புலிகள் வசம் உள்ள ராணுவ வீரர்கள் குறித்த தகவல்களை இலங்கை அரசுக்கு இன்டர்நெட் மூலம் தெரிவிக்க, புதிய தளத்தைஇலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
விடுதலைப் புலிகள் அல்லது பிற அமைப்புகள் வசம் உள்ள ராணுவ வீரர்கள் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிக்குமாறு இந்த இன்டர்நெட் தளத்தில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காணாமல் போன ராணுவ வீரர்கள் யார் வசம் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் பத்திரமாகஉள்ளதை, வீரர்களின் குடும்பத்திற்குத் தெரிவித்து, அவர்களது மனத் துயரத்தைப் போக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
www.helpheroes.lk என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளத்தில் இதுவரை இலங்கைப் போரில் இறந்தராணுவத்தினரின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கும்.
இலங்கை அரசு முதல் முறையாக போர் வீரர் தினத்தை புதன்கிழமை கொண்டாடியது.ஆனால் முதல்நிகழ்ச்சியன்றே அமைச்சர் ஒருவர் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகள் வசம் 1000 ராணுவ வீரர்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. ஈழப் போரில்இதுவரை 60,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications