தமிழகத்தில் இன்று
தனி நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படிக்கிற வாய்ப்பு நமக்குக் கிட்டவில்லை. பத்திரிக்கைகளில் வெளியான தீர்ப்பு விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, பொதுப் பணத்தை ஏப்பம் விடுகிற சதி எதுவும் நடக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பது தெரிகிறது; அதே சமயத்தில் முன்னாள்அமைச்சர் செல்வகணபதி மற்றும் சில அதிகாரிகள், இரு ஏஜெண்டுகள் ஆகியோர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டதுநிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி, நீதிமன்றம் அவர்களுக்கெல்லாம் தண்டனை அளித்திருக்கிறது.
ஊழல் நடந்துள்ளது, அமைச்சரும், அதிகாரிகளளும், ஏஜெண்டுகளும் டி.வி, வாங்குகிற திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, லஞ்சப் பணம்பெற்றார்கள் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி கூறியிருக்கிறார். ஆனால், இதில் ஜெயலலிதாவுக்கு எந்தத்தொடர்பும் கிடையாது என்பது நீதிபதியின் தீர்ப்பு. டி.வி விலை என்ன என்று ஒரு மாநில முதல்வர் கடை கடையாக ஏறி இறங்கி விசாரிக்கமுடியுமா? என்று நீதிபதி கேட்டிருக்கிறார். இது கொஞ்சம் ஆபத்தான நியாயம்.
தன்னிடம் என்ன விலை கூறப்படுகிறதோ, அந்த விலைக்கு ஒரு பொருளை வாங்குமாறு உத்திரவிடுவதுதான் முதல்வர் செய்யக் கூடியகாரியம்; தன்னிடம் கூறப்பட்ட விலை சரிதானா என்று பார்க்க முதல்வரால் முடியாது; அப்படி சரி பார்ப்பதாக இருந்தால், முதல்வரேஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டியதுதான்; இந்த வேலையைச் செய்ய அரசாங்கத்தில் வேறு யாருமே கிடையாது... என்றுசொல்வது போல், இந்த வாதம் அமைந்திருக்கிறது. இது ஏற்புடையது என்றால், இதன் பின்னர் ஒரு முதல்வரின் உத்தரவின் பேரில்,எவ்வளவு அதிக விலை கொடுக்கப்பட்டு, எந்தப் பொருள், எத்தனை எண்ணிக்கையில் வாங்கப்பட்டிருந்தாலும் என்னிடம்சொல்லப்பட்ட விலை இதுதான் என்று முதல்வர் காட்டிவிட்டால், அதன் பின்னர் சட்டமும், சந்தேகமும் ஒதுங்கிக் கொள்ளவேண்டியுதுதான். ஆகையால்தான் இது ஆபத்தான நியாயம் என்று கூறுகிறோம்.
சட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை சார்ந்த சாட்சியங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. நேரில் கண்ட சாட்சி பொய் கூறலாம்; ஆனால் சந்தர்ப்பசூழ் நிலைகள் ஒரு போதும் பொய் உரைக்காது என்பது சட்ட சித்தாந்தங்களில் ஒன்று.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ன கூறுகின்றன என்பது தனி நீதிமன்ற நீதிபதி அளித்துள்ளதீர்ப்பிலிருந்தே ஓரளவு தெரிகிறது. வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்பட்ட புள்ளியை ஜெயலலிதா ஒப்புக் கொண்டார்: டி.வி,. வாங்குவதில்ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்காகவே ஜெயலலிதா தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது; ஒப்பந்தப் புள்ளிப்படியானவிலை, மிக அதிகம் என்ற ஆட்சேபனையை நிதித்துறை செயலாளர் எழுப்ப்பினார்:
ஜெயலலிதாவின் தலையீட்டின் பேரில்தான், அவர் முன் பணம் தரப்படுவது தொடர்பான தனது ஆட்சேபத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்: இறுதி முடிவு ஜெயலலிதாவினால் எடுக்கப்பட்டது: ஆலோசனைக் குழு டி.வி. விலையை நிர்ணயம் செய்த பிறகு, அது சரிதானாஎன்று பார்க்க ஜெயலலிதா முற்படவில்லை... இவை சந்தர்ப்ப சூழ்நிலைகள்.
இந்த சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்கள், இவ்வழக்கில் ஏற்கத் தகாதவைதானா என்பது அப்பீலில் தான் நிச்சயமாக வேண்டும்.
இவை ஒரு புறமிருக்க, சென்ற ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது என்பதை, இந்தத் தனி நீதிமன்றத் தீர்ப்பு ஊர்ஜிதம் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்; அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதில் தொடர்பில்லை என்று நீதிமன்றம் அளித்திருக்கும்தீர்ப்பு, ஒரு நெருக்கடியான நேரத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிற, ஒரு தற்காப்பு கேடயம் என்பதிலும் சந்தேகமில்லை.
தமிழக அரசு செய்யப் போகும் அப்பீலில் தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும். இப்போதைக்குஜெயலலிதாவுக்கு ஒரு பலமான பிரச்சார வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications