தமிழகத்தில் இன்று
கொழும்பு:
கொழும்பு அருகே, அமைச்சர் குணரத்தினே உள்பட 24 பேரைக் கொன்ற விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு நபர், வெற்றிலைகளைகையில் ஏந்திக் கொண்டு அமைச்சரை நெருங்கி வெடிகுண்டை இயக்கியதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அப்போது இருந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச்சேர்ந்தவராக அந்த நபர் இருந்திருக்க வேண்டும். தாடியுடன் அவர் இருந்தார். பேரணி நடந்த இடத்திற்கு அமைச்சர் வருவதற்கு முன் கொஞ்சநேரம் கோவில் ஒன்றின் முன் அவர் காத்திருந்தார்.
அமைச்சர் வருவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு அங்கிருந்து நடந்து, சாலையைக் கடந்து, மொரட்டுவா சந்திப்பில் இருந்த மூன்று சக்கரவாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று காத்திருந்தார். பேரணி மொரட்டுவா சந்திப்பை நெருங்கியபோது, அமைச்சர் அருகேஅந்த நபர் சென்றார். கையில் வெற்றிலை வைத்திருந்தார். அவற்றை அமைச்சரிடம் கொடுத்தார். அதை அமைச்சர் வாங்க முயன்றபோதுஉடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை இயக்கியுள்ளார்.
விபத்து நடப்பதற்கு 20 நிமிஷங்களுக்கு முன்பு, அமைச்சர் சாலையைக் கடந்து பொதுமக்கள் இருந்த பகுதிக்குச் செல்ல முயனறார்.அப்போது அவரை நான் எச்சரித்தேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை என்றார் அந்த போலீஸ் அதிகாரி.
போர் வீரர் நினைவு நாளையொட்டி புதன்கிழமை காலை, அதிபர் மாளிகையில், சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் விழா நடந்தது.அதில் கலந்து கொண்டு விட்டு அமைச்சர் குணரத்தினே, மொரட்டுவா சந்திப்பிற்கு பேரணியைப் பார்வையிட வந்தார். அப்போதுதான்இந்த கோரச் சம்பவம் நடந்தது.
காயமடைந்த அமைச்சரின் மனைவி சியாமா இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அவரது வயிற்றுப் பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. அவருக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது.
வேன் பறிமுதல்:
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவா சந்திப்பிலிருந்து ஒரு வேனும்கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வேன் மூலம் மனித வெடிகுண்டு நபர் அந்த இடத்திற்கு வந்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர்சந்தேகிக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications