தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் - உயிர்ச்சேதம் இல்லை

பெங்கலூ:

வியாழக்கிழமை அதிகாலை இந்தோனேசியாவில் சுமத்ரா தீவிலுள்ள பெங்கலூ டவுன் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கம் 6.2 என்ற ரிக்டர் அளவில் இருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 120 பேர் இறந்தனர். 1300 க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.

வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்புஏற்பட்டது. அப்பகுதிவாழ் மக்கள் அனைவரும் அப்பகுதியிலிருந்து வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.

மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகிலுள்ள விமானநிலையத்திற்குச் சென்று தங்களுக்கு நிவாரண உதவி செய்யக்கோரியும்,மழையினால் பாதிப்படைந்த சாலைப்பகுதிகளைச் சரி செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் நிவாரணமாக உணவு, மருந்துகள் ஆகியவைஅளிக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக முதல்கட்டமாக 6 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு உதவித்தொகையும், முதலுதவியும் அளிக்க முன்வந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+