தமிழகத்தில் இன்று
மெரினா கடற்கரையில் பு-தைக்-கப்-பட்-ட குழந்தை
சென்னை:
சமுத்திரத்தில் கால் நனைப்பதற்கும், கடற்கரை காற்று வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரைமணலில் கொன்று புதைக்கப்பட்ட ஒரு மாதக் கைக் குழந்தையின் பிணம் மீட்கப்பட்டது.
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அந்தக் காட்சியை மக்கள் பரிதாபத்துடன் பார்த்தனர். சென்னை மெரினா கடற்கரையில் வியாழக்கிழமைஅதிகாலையில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது கடல் மணலில் ஓரிடத்தில் புதை குழி போல் தோற்றமளிப்பதை கண்டனர்.
அருகில் சென்று அவர்கள் பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ குழி தோண்டப்பட்டு பின் இரண்டடி கூட தோண்டியிருக்க மாட்டார்கள். அதற்குள்துணியால் சுற்றப்பட்ட ஏதோ ஒன்று இருப்பது தெரிந்தது.
உடனடியாக அதை வெளியே எடுத்து பார்த்ததும் திடுக்கிட்டனர். பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் உடல் அது. புதுச் சட்டையும், கறுப்புவளையல்களும் அணிந்திருந்த நிலையில் அக்குழந்தையின் உடல் காணப்பட்டது.
கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்காது என்பது அதன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்ல நிலையில்இருந்த அந்த பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்றும் போலீஸ் விசாரணை தொடர்கிறது. குழந்தையின் பெற்றோர் யார்? கடற்கரை மணலில் புதைக்கவேண்டிய காரணம் என்ன? கள்ளக் காதலில் பிறந்த குழந்தையா? அல்லது எய்ட்ஸ் நோய் தாக்கிய குழந்தையா? என்று பல்வேறு சந்தேகங்களைஏற்படுத்தியுள்ளது இந்தக் கைக்குழந்தையின் மரணம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications