தமிழகத்தில் இன்று
மைக்-க வி-டுங்-கப்-பா!...அரைகுறை பேச்சாளர்களுக்கு ஜெ. அன்புக்கட்டளை
சென்னை:
மைக்கைப் பிடித்தால் விட மறுக்கும் அரைகுறைப் பேச்சாளர்களுக்கு ஜெயலலிதா அன்புக்கட்டளை விடுத்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் வியாழக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி. வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் இல்லாதஅளவில் பொதுமக்கள் அதிமுக பொதுக்கூட்டங்களில் பெருமளவு பங்கேற்கின்றனர் என்பதிலும் மகிழ்ச்சி.
சிறந்த முன்னணி சொற்பொழிவாளர்களின் பேச்சைக் கேட்பதற்குப் பேரார்வத்தோடு பொதுமக்கள் வந்து அமர்ந்து காத்திருக்கும் நிலையில், சிறப்புப்பேச்சாளரும் நெடுநேரம் மேடையில் இருக்கும்போது உள்ளூர்ப் பேச்சாளர்களும் நிர்வாகிகளும் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதால் பொதுமக்கள்களைப்படைந்து விடுகின்றனர்.
சிறப்புப் பேச்சாளர்களுக்கு மைக் கொடுக்கும்போது இரவு 11, 12 மணி ஆகி விடுவதால் கூட்டம் நடத்துவதன் நோக்கம் முழுமை அடையாமல் போய்விடுகிறது.
சிறப்பு பேச்சாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மிகுந்த கால தாமத்திற்குப்பிறகு பேசத் தொடங்குவதால் பொதுமக்களிடம் பேச்சைக் கேட்பதற்குஆர்வம் குறைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி விடுகிறது.
எனவே பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் முழுமையான பயன் கட்சிக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க உள்ளூர்ப்பேச்சாளர்களும், நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சிறந்த முன்னணிப் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றும் கூட்டங்களில் இரவு 9 மணிக்கே அவர்களிடம் மைக் வழங்க வேண்டும் என்பதே என் அன்புக்கட்டளை.
இதைக் கட்சியினர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications