For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: முதலமைச்சராக இருப்பவர் மற்ற அதிகாரிகளை நம்பித்தான் செயல்பட வேண்டியுள்ளது. கலர் டி.வி வழக்கில் ஜெயலலிதாவைக்குற்றவாளியாகக் கருதினால், தமிழகத்தில் யாருமே முதலமைச்சராக நீடிக்க முடியாது என்று அதிரடியாக தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது பற்றி...?

ப: நடக்கிற குற்றம் எதுவாக இருந்தாலும், அதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று கருதிவிட்டால், அதன் பின்னர் ஒருவருமேஅதிகாரியாக நீடிக்க முடியாது.

கே: பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் பயங்கரவாத தடுப்பு மசோதாவை கொண்டு வர, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளதே..?

ப: தீவிரவாதிகளைப் பற்றிய தகவல் அளித்த பத்திரிக்கையாளர்கள், அது பற்றிய விவரங்களை அரசுக்குத் தர மறுத்தால் தண்டனை- என்பது மசோதாவின் ஷரத்துக்களில் ஒன்று. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிக்கையாளர்களும் குடிமக்களே.நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களே!

கே: தொலைத் தொடர்பு ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும் - என்ற அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின்அறிவிப்பு குறித்து...?

ப: பொறுப்பின்மைக்கு நல்ல உதாரணம்.

கே; நான் எனது வாழ்க்கைக்கு வழி காட்டியாக தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். உருப்படுவேனா?

ப: உருப்பட்டால் எனக்குத் தெரிவியுங்கள். அதன் பிறகு நானும் தைரியமாக என்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வேன்.

கே: பத்திரிக்கைத் தொடருக்கும், தொலைக்காட்சித் தொடருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ப: டி.வி. தொடர் மாதிரி, பத்திரிக்கைத் தொடர் அமையாது. ரொம்ப கஷ்டம். உதாரணமாக டி.வி. தொடரில் ஒருவன் தனதுகாரியாலயத்திற்கு போகிறான் - என்பதை எப்படிக் காட்டுகிறார்களோ, அதே போல் பத்திரிக்கையில் எழுத வேண்டுமென்றால்,எப்படி எழுதுவது?அவன் வீட்டு வாசலுக்கு வந்தான்.: தெருவில் இறங்கினான்: ஒரு அடி எடுத்து வைத்தான்: அடுத்த அடி எடுத்துவைத்தான்: அதற்கும் அடுத்த அடி எடுத்து வைத்தான் ... என்று அரை மணி நேரம் படிக்கிற மாதிரி எழுத முடியுமா?

கே: சிம்பன்சி குரங்குகள் வருங்காலத்தில் பேசுமாமே? என்ற கேள்விக்கு, அது தான் பேசிக் கொண்டு இருக்கிறோமே என்றுபதில் அளித்துள்ளீர்களே .. பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தானே பதில் அளித்திருக்க வேண்டும்...?

ப: அந்த மாதிரி சொன்னால், உங்கள் பெருமையை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக உங்களுக்குக் கோபம் வருமே?

கே; இனிமேல் டி.வி.யில் கிரிக்கெட் பார்ப்பதாக உத்தேசம் உண்டா?

ப: ஓ! பார்ப்பேனே! என்ன வந்து விட்டது? டி.வி.யில் நாடகங்கள் பார்ப்பதில்லையா? அவற்றுக்கு நடுவில் வருகிற லாட்டரி சீட்டுபோன்ற சூதாட்ட விளம்பரங்களைப் பார்ப்பதில்லையா? அந்த மாதிரி இதையும் பார்த்தால் போயிற்று.

கே: கபில் தேவ் மீது மனோஜ் பிரபாகர் கூறிய குற்ற்ச்சாட்டு இருக்கட்டும்; தனிப்பட்ட முறையில் கபில்தேவ் மீது தங்கள்எண்ணம் எப்படிப்பட்டது...?

ப: உயர்ந்ததாகத்தான் இருந்தது. இப்போது. ஒன்றும் புரியவில்லை. யார் எப்படிப்பட்டவர்? எது நிஜம் என்பதெல்லாம் புரியாதவிஷயமாகத்தான் இது இருக்கிறது. இறுதியில் எல்லாம் தெளிவாகி விடும் - என்ற நம்பிக்கையுமில்லை.

கே: வி.பி.சிங் அரசியல்: சுர்ஜித் சிங் அரசியல் - என்ன வித்தியாசம்?

ப: அரசியல் தீமை செய்வது, முதலாமவரின் இயல்பு: இரண்டாமவரின் தொழில்.

கே: மீன் சாப்பிட்டால் மூளை வளரும் என்ற இங்கிலாந்து விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு எதைக் காட்டுகிறது?

ப: முதலைக்கு இருக்கிற மூளை வளர்ச்சி வேறு யாருக்கும் இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

கே; தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல கலைஞரடிப் பொடி ஆழ்வார் துரைமுருகன் - என்று கவிஞர் வைரமுத்துபாராட்டுகிறாரே?

ப: கலைஞரை, தொண்டருக்குச் சமானமாகப் பேசியிருக்கிறார் வைரமுத்து. நல்லதுக்கில்லை.

கே: சிவகாசி மக்களுக்கு சேவை செய்ய வைகோ எம்.பி. ஆனாரா? இல்லை யாழ்ப்பாண காடுகளில் திரியும் விடுதலைப் புலிகளுக்குசேவை செய்ய எம்.பி. ஆனாரா? எனக் கேட்டுள்ளாரே சுப்ரமண்யம் ஸ்வாமி! இதுபற்றி...?

ப: வைகோ தமிழக எம்.பி. தமிழகத்தையே யாழ்ப்பாணம் ஆக்கிவிட வேண்டும் என்பது அவருடைய தணியாத ஆசை.

கே: பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி எதிர்ப்புதெரிவித்துள்ளது சரியா?

ப: அவர் புரிகிற வாதம், பயங்கரமாக இருக்கிறது.

கே; தி.மு.க., ம.தி.மு.க., உறவில் நெருடல் ஏற்படுத்த முடியாது என்று வைகோ கூறியுள்ளது பற்றி...?

ப: வரட்டும்: தேர்தல் அறிவிக்கப்பட்டு சீட்டு பேரம் நடக்கிற நேரம் வரட்டும்.

கே; மனிதாபிமான உதவி என்றால் என்ன?

ப: நீங்கள் அடி வாங்குகிற போது, அதைப் பார்த்து, நான் குறுக்கிட்டு அடிப்பவனை தடுத்து நிறுத்தினால் - அது உருப்படியான உதவி.நீங்கள் அடி வாங்கிய பிறகு , வீடு போய்ச் சேர உங்களுககு நான் உதவினால் - அது மனிதாபிமான உதவி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X