தமிழகத்தில் இன்று
கலர் டிவி வழக்கு: தள்-ளு-ப-டி-யா-ன-து செல்வகணபதியின் மனு
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜெயில் தண்டனை பெற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதியின் மேல் முறையீட்டு மனுதள்ளுபடி செய்யப்பட்டது.
கிராமப் பஞ்சாயத்துக்களுக்குக் கலர் டிவி வாங்கியதில் ரூ 10.16 கோடி ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்செல்வகணபதி உள்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்துவந்தார்.
இவ்வழக்கு கடந்த 30 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா, உறவினர் பாஸ்கரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வகணபதி, முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் பாண்டே மற்றும் சத்யமூர்த்திஉள்ளிட்ட ஏழு பேருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, அபராதமும் விதித்து தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து செல்வகணபதி சென்னை உள்பட 7 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி பாண்டே, சத்யமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் செகரட்டரி ஜனார்த்தனன், டிவி ஏஜன்டுகள்துரைசாமி, முத்துக்குமாரசாமி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications