தமிழகத்தில் இன்று
புரட்சிக்காரர்களைப் பட்டினி போட்டு பணிய வைக்க பிஜி ராணுவம் முடிவு?
வெல்லிங்டன்:
பிஜித் தீவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலரை பினைக் கைதிகளாக வைத்திருக்கும், ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அவரதுஆதரவாளர்களை பட்டினி போட்டு, பினைக்கைதிகளை மீட்க பிஜி ராணுவம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பீட் மற்றும் அவரது 100 ஆதரவாளர்கள் உள்ளனர். பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட30-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது பிடியில் உள்ளனர். மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள்செளத்ரியின் ஆட்சியை புரட்சி மூலம் கவிழ்த்தனர்.
11 நாட்களுக்கு முன்பு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளகாத்தைச் சுற்றிலும்ராணுவம் நிறுத்தப்பட்டது. புரட்சிக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.தற்போது புரட்சிக்காரர்களுக்கு உணவு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பீட் தெரிவிக்கையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு உணவு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உணவுப் பொருள்எதுவும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. எங்களுக்கு உணவு அனுப்புவதை நிறுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.நாங்களும் பிஜி இனத்தவர்கள்தான். எங்களைப் பட்டினி போடுவதால் என்ன கிடைத்து விடும் என்றார் ஆத்திரத்துடன் ஸ்பீட்.
ஸ்பீட் பிடியில் உள்ள 31 பேருக்கு அனுப்பப்பட்ட உணவை ஸ்பீட் ஆதரவாளர்களே சாப்பிட்டு விட்டதாக பிஜி பத்திரிகையொன்றில் செய்திவெளியிடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு ஸ்பீட் ஆதரவாளர்களில் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகேயுள்ள வீடுகளுக்குள் புகுந்துசூறையாடினர். இதையடுத்து அவர்களை தனது குழுவிலிருந்து விரட்டி விட்டதாக ஸ்பீட் தெரிவித்தார்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications