தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

"லைப் சர்-டி-பி-கேட்" வாங்க வந்தவர் மாரடைப்பால் சாவு

பொகோதா (கொ-லம்-பி-யா):

உயிருடன் இருக்கிறேன் என்பதற்கான சான்றிதழை வாங்க அரசு அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த 87 வயது முதியவர், மாரடைப்பு ஏற்பட்டுஅங்கேயே இறந்தார்.

இந்த பரிதாபத்துக்குரிய முதியவரின் பெயர் அர்டுரோ சுஸ்பே. பொதுப் பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதந்தோறும் 133 டாலர்ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை அரசுக்குச்சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் வாங்குவதற்காக மத்திய கண்டின்மார்கா மாகாண அரசு அலுவலகத்திற்கு அவர் வந்தார். போலியாக பலர் ஓய்வூதியம் வாங்குவதால்சான்றிதழ் தருவதை தீவிர பரிசீலனைக்குப் பிறகே அலுவலக அதிகாரிகள் செய்து வந்தனர். இதனால் அர்டுரோ நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியதாயிற்று. இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து மாகாண கவர்னர் ஆன்டிரஸ் கோன்சாலஸ் கூறுகையில், இது முற்றிலும் விபத்துதான். இருப்பினும் மிகவும் துரதிர்ஷடவசமானது. சுஸ்பேமரணத்தை அடுத்து விதிமுறைகளை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.

கொலம்பியாவில், அரசு அலுவலகத்தில் எந்த சான்றிதழ் வாங்க வேண்டுமானாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+