தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் திமுக ஆதரவு கொடுக்கும். செக் மாடல் பிரிவினை குறித்து கருணாநிதி கூறியதுவெறும் யோசனை மட்டும்தான் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் கூறியுள்ளார்.
இலங்கையைப் பிரித்து செக்கோஸ்லோவேகியா போல இரு நாடுகளாக உருவாக்க வேண்டும் என்று தனது பிறந்த நாள் விழாவின்போது தமிழக முதல்வர்கருணாநிதி பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணாநிதியின் திமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இது தர்மசங்கடத்தைக் கொடுத்தது. கருணாநிதி கருத்து அவரது சொந்தக் கருத்துஎன்று பிரதமர் வாஜ்பாய் கூறினார். இந்த நிலையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை கூட்டியிருந்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாறன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் மாறன் பேசுகையில், இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை, மத்திய அரசின் முடிவே, திமுகவின்முடிவும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுகவும் பங்கேற்றுள்ளது. எனவே மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு திமுக முழு சம்மதம் தெரிவிக்கிறது.
இலங்கையின் இறையாண்மையைக் காக்கும் விதத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எங்களது ஆதரவு உண்டு.
தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை குறித்துக் கூறிய கருத்துக்கள் திரித்துக் கூறப்பட்டுவிட்டன. வேண்டும் என்றே மிகைப்படுத்தப்பட்டு விட்டது. அவரதுஅறிக்கை சில பத்திரிகைகளில் தவறாக வந்து விட்டது. தவறான அறிக்கைகளை விட அவர் ஒன்றும் ஜெயலலிதா அல்ல என்றார் மாறன்.
பேட்டியின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் உடன் இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications