தமிழகத்தில் இன்று
இவர்களும் இனி இந்தியர்கள்...
ஜெய்ப்பூர்:
35 வருட காலப் போராட்டத்திற்குப் பிறகு 149 பாகிஸ்தானியர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளனர்.
1965-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த வேளையில், 149பாகிஸ்தானியர்கள், சிந்து மாகாணத்திலிருந்து, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்குள் அகதிகளாக வந்தனர்.
அகதிகளாக இதுவரை வாழ்ந்து வந்த இவர்கள், இந்தியக் குடியுரிமை கோரி 35 வருடமாக போராடி வந்தனர். அவர்களது போராட்டத்திற்கு இப்போதுபலன் கிடைத்துள்ளது. இவர்களும் இப்போது இந்தியர்களாகியுள்ளனர்.
குடியுரிமை வழங்கப்பட்ட 149 பேரும் இந்துக்கள். இதுகுறித்து ஜெய்சால்மர் மாவட்ட கலெக்டர் ரஜத் மிஸ்ரா கூறுகையில், 149 பேருக்கும் இந்தியக்குடியுரிமை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இத்தனை ஆண்டுளாக அகதிகள் என்று பதிவு செய்யாமலேயே வாழ்ந்து வந்தனர். குடியுரிமை கோரி அவர்கள் விண்ணப்பித்த மனுக்கள்தகுதியுடையதாக இருந்ததால் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
149 பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளதை ராஜஸ்தானில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹிந்து சிங் சோதாவரவேற்றுள்ளார்.
அவர் கூறுகையில், நீண்ட கால கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இருப்பினும் 1965, 1971-ம் ஆண்டு போர்களின்போது அகதிகளாகஇந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் பலர் இன்னும் குடியுரிமை இல்லாமல் உள்ளனர்.
ராஜஸ்தானின் நான்கு மாவட்டங்களில் 4000 பாகிஸ்தான் அகதிகள் இருக்கின்றனர். இவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
1971-ம் ஆண்டுப் போரின்போது இந்தியாவுக்கு வந்த அகதிகளுக்குப் பெரிய பிரச்சினையில்லை. சிம்லா ஒப்பந்தப்படி அவர்களுக்கு இந்தியக் குடியுரிமைவழங்கப்பட்டு விட்டது.
போரின்போது இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்களை சமாதானப்படுத்தி, பாகிஸ்தானுக்கு அழைத்துச செல்வதற்காக இரண்டு அரசியல்தலைவர்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியது. ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் சோதா.
சோதாவே, 1971-ம் ஆண்டுப் போரின்போது சிறுவனாக இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்தான். இவருக்கு 1987-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமைவழங்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications