கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சொத்-து...பணம்: லல்லு, ராப்ரி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை
பாட்னா:
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள் கட்சித் தலைவர் லல்லு பிரசாத்யாதவ், அவரது மனைவி மற்றும் தற்போதைய முதல்வர் ராப்ரிதேவி ஆகியோர் மீது வெள்ளிக்கிழமை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் மேல் ஊழல்வழக்குகளில் தொடர்புடையது சம்பந்தமாக குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக பிகார் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் அவரது கணவர்லல்லு பிரசாத் யாதவ் மேல் தொடரப்பட்ட வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.லால் கூறுகையில் குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல்தடுப்புச் சட்டப்படி குற்றவாளி மேல் கூறப்பட்ட புகார்கள் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஏழு வருடம்கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
தற்போதைய முதல்வர் ராப்ரிதேவி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், சொத்துக்களைமறைப்பதற்காகத் தன் கணவரும் முன்னாள் பிகார் முதல்வருமான லல்லுப் பிரசாத் யாதவுக்கு உடந்தையாயிருந்ததுதொடர்பாகவும் கைது செய்யப்படுவார்.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது லல்லுப் பிரசாத் யாதவும், அவரதுமனைவி ராப்ரிதேவியும் ஆஜரானார்கள்.
லல்லுப்பிரசாத் யாதவ் மீது சிபிஐ நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவதுமுறையாகும். ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லுவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது.
வருமான வரி உயர் அதிகாரி ஷாகாய் இதுகுறித்துக் கூறுகையில் 1992 முதல் 1997 வரை ராப்ரி தேவி மற்றம் லல்லுபிரசாத் யாதவ் ஆகியோர் வருமான வரி கட்டவில்லை. அவர்களது தற்போதைய சொத்துக்களின் மதிப்புவருமானத்தை விட அதிகமாக உள்ளது. இதுகுறித்து மே 25 ம் தேதி சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்தியதில்அவர்களது நகரும் சொத்துக்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications