தமிழகத்தில் இன்று
-எங்-க-ளி-டம் போதி-ய அணு ஆயுதங்கள் உள்ளன: இந்-தி-யா விளக்-கம்
டெல்லி:
இந்தியாவில் நவீனரக அணு ஆயுதங்கள் போதிய அளவு இல்லை என்று வந்த செய்தியை மத்திய அர-சு மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் போரைச் சமாளிக்கும் வகையில் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிலோ அந்த அளவு அணு ஆயுதங்கள் இல்லை.இந்தியாவில் உள்ள அணுஆயுதங்களை விட பாகிஸ்தானில் உள்ள ஆயுதங்கள் அதிக திறன் வாய்ந்தவை என்று அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறைஅதிகாரிகள் என்.பி.சி. டிவிக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
1998ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 25 முதல் 100 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானில் 10 முதல் 15 அணுஆயுதங்களும் இருந்தன. ஆனால் அதற்குப்பின்இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளதை விட பாகிஸ்தானில் 25 முதல் 100 அணு ஆயுதங்கள் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தது.பாகிஸ்தான் அணுஆயுதங்கள் அதிக அளவு திறன் வாய்ந்ததாகவும் உள்ளது. அவற்றை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதத் திட்டங்கள் அனைத்தும் சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் அமல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிடம் உள்ள ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்களை விட பிரான்-சி-ட-மி-ருந்-து பாகிஸ்-தான் வாங்--கி-யுள்-ள மிராஜ் மற்றும்அமெரிக்காவிலிருந்து வாங்-கி-ய எஃப்-16 ரக போர் விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் 30க்கும் மேல் பாகிஸ்தானிடம் உள்ளன என்று அந்தப் பேட்டியில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறினார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேவையான அளவு அணுஆயுதங்கள் உள்ளன. நாட்டின்தேசியஒருமைப்பாட்டைக் காக்கும் வகையில் எல்லா வசதிகளும் இந்தியாவில் உள்ளது. போர் விமானங்கள், அவற்றை எடுத்துச் செல்லும்ஏவுகணைகளும் போதுமான அளவு உள்ளன.
நாட்டில் ஏற்படும் எல்லாவித சவால்களையும் சமாளிக்கும் வகையில் இந்தியாவில் அணு ஆயுதவசதிகள் உள்ளன. இதற்கு மாறாக வெளிவந்த செய்திகள்அனைத்தும் வதந்திகள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானும் மறுப்பு:
என்பிசி டிவியில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும், அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களும் கூறியபடி இந்தியாவை விட எங்களிடம் அணு ஆயுதங்கள்அதிகம் இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்று பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானை விட இந்தியாவிடம்தான் 5 மடங்கு அதிகமாக போர் விமானங்கள்,ஏவுகணைகள் மற்றும் அனைத்து அணு ஆயுத வசதிகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications