தமிழகத்தில் இன்று
நான் யோசனை சொன்னது இலங்கைக்கு என்கிறார் கருணாநிதி
சென்னை:
இலங்கை பிரச்சனைக்கு நான் தெரிவித்த யோசனை இலங்கை அரசுக்குதெரிவிக்கப்பட்டதே தவிர, தே.ஜ. கூட்டணி மீது திணிக்கப்பட்ட கருத்தல்ல என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதை எடுத்துப் போட்டுக் கொண்டு செயல் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
மகாபாரதக் கதையில் ஒரு கிளைக் கதை உண்டு. போர் நடந்து கொண்டிருக்கும் போது,துரோணரை வீழ்த்த என்ன வழி என்று கண்ணன் யோசித்தான். மகன் அசுவத்தாமன்மீது துரோணருக்கு உயிர். அவன் இறந்துவிட்டான் என்று சொன்னால் துரோணர்வீழ்ந்து விடுவார். ஆனால், அந்த பொய்யை தர்மர் சொன்னால்தான் துரோணர்நம்புவார்.
தர்மரோ பொய் சொல்ல மாட்டான்.எனவே போரில் அசுவத்தாமன் என்ற யானைஇறந்து விட்டது என்று தர்மரை சத்தம் போட்டுச் சொல்லும்படி கண்ணன் சொன்னான்.அதன்படி போர்களத்தில் தர்மர் சத்தம் போட்டு கத்தினான்.
எப்படி என்றால் அசுவத்தாமா அதகா குஞ்சரகா என்று கத்தினான். குஞசரகா என்றால்யானை. குஞ்சரகா என்ற வார்த்தை கேட்காத வகையில் சங்கை எடுத்து ஊதி,துரோணரை வீழ்த்தினான் கண்ணன்.
அதேமாதிரி இலங்கைப் பிரச்சனையில் செக்கோஸ்லேவேகியா போல் தீர்வு என்றுதான் பேசினேன். பாதியை பத்திரிக்கைகள் மறைத்து விட்டன. செக்கோஸ்லோவேகியாபோல் தனி நாடுதான் அமைதிக்கான தீர்வா? அல்லது இலங்கை இறங்கி வந்துதமிழர்களுக்கு உரிமைகளை கொடுப்பது தான் தீர்வா? என்ற கேள்விக்கு விடைகண்டாக வேண்டும் என்று நான் பேசினேன்.
அதன் தொடர்ச்சியாக அரசியல் தீர்வு என்பது (குவாசி பெடரல் ) அல்லது (கான்பெடரல்) அல்லது செக்கோஸ்லேவேகியா மார்க்கமா இதில் ஏதாவது ஒன்றை இருசாரரும் ஒப்புக் கொண்டால் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டிற்கோ எந்த ஆபத்தும் வராதுஎன்றுதான் நான் பேசினேன்.
நான் மீண்டும் சொல்கிறேன்.இதில் ஏதாவது ஒரு தீர்வு கண்டு போரை நிறுத்துங்கள்.தமிழகத்திற்கு அகதிகளை அனுப்பி வைத்து எங்களை அவதிப்பட வைக்காதீர்கள்.இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அமைதி தவழட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications