தமிழகத்தில் இன்று
ஊழலை த-டுக்-க ஒ-ரு "வாரம்"
சென்னை:
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதிலும் அக்டோபர் மாதம், ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படும் என்று மத்தியஅரசின் தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் கூறியுள்ளார்.
ஊழலை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் ஐந்தாவது தூண் என்ற அமைப்பைத் துவக்கி வைத்து சென்னையில் அவர் பேசியதாவது:
இந்திய சமுதாயத்தைப் பாதித்துள்ள எய்ட்ஸ் நோயாக ஊழல் அமைந்துள்ளது. நாட்டின் நிதியிருப்பையே இது அழித்து விடும். குறைந்த நஷ்டத்தில் நிறைந்த லாபம்என்ற கண்ணோட்டத்தில்தான் லஞ்சம், ஊழல் பார்க்கப்படுகிறது.
பினாமி சொத்துத் தடுப்பு சட்டம் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு யோசனை கூறப்பட்டது. அந்தச் சட்டத்தை உடனடியாக கொண்டு வருமாறு மத்தியஅரசுக்குத் தெரிவித்துள்ளேன். இதை அமல் செய்யும் பொறுப்பை கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்குமாறும் மத்திய அரசுக்கு யோசனைதெரிவித்துள்ளேன். இருப்பினும் இந்த யோசனையை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சில பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி எனக்கு வியப்பாக உள்ளது.
இந்தியாவில் நிலவும் லஞ்சம், ஊழல் காரணமாக நாட்டின் 20 சதவீத வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் பாதுகாப்பையும்கேள்விக்குரியதாக்கும் விதத்தில் லஞ்சம், ஊழல் உள்ளது.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், சுங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தே கொண்டு வரப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications