தமிழகத்தில் இன்று
ஜெ. விழாவுக்குப் போலீஸ் தடை: தஞ்-சை அ-ரு---க பத-ற்றம்
தஞ்சாவூர்:
ஒரத்தநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ள இருந்த விழாவுக்குப் போலீசார் -த-டை விதித்ததால் அங்-கு பெ-ரும் பதற்-றம்நில--வி-ய-து. இதை-ய-டுத்-து தடை வாபஸ் பெறப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நான்கு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் சென்றுள்ளார்.
12 ம் தேதி ஜெயலலிதா ஒரத்தநாட்டில் பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் வீரமணி நிறுவியுள்ள பெரியார் கம்ப்-யூட்-டர் அறி-வி-யல் கல்லூரியைதிறந்து வைக்கிறார். இந்தத் திறப்பு விழா 12 ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது.
இவ்விழாவில் தமாகா தலைவர் மூப்பனார், இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர்வரதராஜன், ராஷ்டிரிய ஜனதாதள தமிழ்நாடு தலைவர் ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவை ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகே நடத்த ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு மனு அனுப்பப்பட்டது.
அங்கே மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் விழா நடத்தினால் அது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும்என்று வர்த்தக அமைப்பினர் எதிர்ப்புக்குரல் எழுப்பி வந்தனர். இதனால் அங்கு விழா நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதவிர கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரத்தநாட்டில் இரு இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள்,விழாக்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி போலீசார் விழா நடத்துவதற்குத் தடை விதித்தனர்.
இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி அமரேஷ் பூஜாரி ஒரத்தநாடு பகுதியில் விழா நடக்க இருந்த இடத்தைப் பார்வையிட்டு பின்னர் விழா நடத்த எதிர்ப்புத்தெரிவித்த வர்த்தக சங்கத்தினரையும் அழைத்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து 12 ம் தேதி விழா நடக்க அனுமதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே விழா திட்டமிட்டபடி நடக்கும் என்று திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி தெரிவித்தார்.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications