தமிழகத்தில் இன்று
பஞ்சாபில் பூட்டிய வீட்டுக்குள் கொல்-லப்-பட்-டு கிடந்--த பாதிரியார்
ஜலந்தர்:
வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த கிறிஸ்த பாதிரியாரின் சடலத்தை கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இக்கொலைச் சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கானியாவாலி பகுதியில் நடந்தது.
இது குறித்துப் போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட பாதிரியார் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆசிஷ் பிரபாஷ் என்று அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் பஞ்சாப் முழுவதும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக டாக்குமென்டரி படங்கள் பலவற்றை மக்களிடையே போட்டுக் காண்பித்து கிறிஸ்தவமதம் குறித்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதுவே இவர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் குரூரமான முறையில் பாதிரியார் ஆசிஷ் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.அவரது உடலில் பல காயங்கள் உள்ளன. அவரது சடலம் இருந்த அறையில் கேனில் அடைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயும் இருந்தது.
குற்றவாளிகள் அவரைக் கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது பிணத்தை எரிக்க முயன்றிருக்கிறார்கள்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் வீட்டு வாசல் வராண்டாவில் வைக்கப்பட்டிருந்த சிமென்டை எடுப்பதற்காக அங்கு வந்த கட்டிடத்தொழிலாளர்கள் வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதைக் கண்டு வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது பாதி எரிந்த நிலையில் கிடந்த அவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாதிரியாரிடம் தோழமை உணர்வுடன் பேசி குற்றவாளிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம்.
பாதிரியார் ஆசிஷ் தனது 20 வயதில் யாருமில்லாத ஆதரவற்றவராக இருந்தார். இந்தியா கேம்பஸ் க்ரூசேட் பார் கிறைஸ்ட் என்ற அமைப்பில் சேர்ந்தார்என்றனர்.
இந்த அமைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஃபிலிப் கூறுகையில், ஆசிஷ் தனது பயிற்சியை முடித்து விட்டு 1998 முதல் இந்த அமைப்பின் முழுநேர பாதிரியாராகஇருந்தார். இந்த வருடம் தனது பிஏ இறுதித்தேர்வு எழுதியுள்ளார் என்றார்.
மேலும் போலீசார் அவர் வீட்டிலிருந்த சான்றிதழ்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர் வீட்டிலிருந்த டிவி முழுவதுமாய் எரிக்கப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications