சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் கலந்து கொள்ள பிரேசிலுக்குத் தடை வருமா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ரியோடிஜெனிரோ:
கால்பந்துப் போட்டிகளில் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக பிரேசில் கால்பந்துக் கழகம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரேசில் அணி சர்வதேசப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தென் அமெரிக்க கால்பந்துக் கழக பொதுச் செயலாளர் எட்வர்டோ டிவுகா கூறியுள்ளார்.
கால்பந்துப் போட்டிகளில் புள்ளிகள் வழங்கும் முறை தொடர்பாக பிரேசில் கால்பந்துக் கழகத்திற்கும், பிரேசில் நாட்டு அணியான வாஸ்கோடாகாமாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது நீதிமன்றத்தில் வாஸ்கோடா காமா வழக்குத்தொடர்ந்துள்ளது. இந்தப் புகார் குறித்து தென் அமெரிக்க கால்பந்துக் கழகமும் விசாரித்து வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த பிரேசில் கால்பந்து சாம்பியன் போட்டித் தொடரில் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக வாஸ்கோடா காமா அணி தனது அதிருப்தியைவெளியிட்டிருந்தது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது நீதிமன்றத்தில் வாஸ்கோடா காமா அணி நிர்வாகிகள் வழக்குத் தொடர்ந்தனர்.
தற்போது இந்தப் பிரச்சினை குறித்து தென் அமெரிக்க கால்பந்துக் கழகம் விசாரித்து வருகிறது. வாஸ்கோட காமாவின் புகார் மற்றும் பிரேசில்கால்பந்துக் கழகத்தின் நடத்தை குறித்து விசாரிக்கப்படும். அதன் பிறகு புதன்கிழமை இதுகுறித்த அறிக்கை சர்வதேச கால்பந்துக் கழகத்திற்குஅனுப்பப்படும்.
பிரேசில் கால்பந்துக் கழகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததற்காக வாஸ்கோடா காமா மீது இரண்டு ஆண்டு தடை விதிக்கபரிந்துரைக்கப்படும் என்று தெரிகிறது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், பிரேசில் அணி சர்வதேசப் போட்டிகளில்கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
நான்கு முறை உலகக் கோப்பையை வென்றது பிரேசில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications