தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரத்தை நனைக்-கி-ற-து அகதிகளின் கண்ணீர்

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் அகதிகள் வடிக்கும் கண்ணீரில் ராமேஸ்வரம் கடல்நனைந்து கொண்டிருக்கிறது.

இந்திய கடல் எல்லையில் தீவுத்திட்டில் இறக்கி விடப்பட்ட 68 இலங்கை அகதிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுதனுஷ்கோடிக்கு அழைத்து வரப்பட்டனர். 5-ம் தீவுத்திட்டில் 19 குழந்தைகள் உள்பட 68 அகதிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இவர்களை ராமேஸ்வரம் தாசில்தார் காசிநாதன், ராமகிருஷ்ணபுரம் மீனவர் சங்கத் தலைவர் குமரேசன் ஆகியோர்2 படகுகளில் தனுஷ்கோடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்கள் தனுஷ்கோடி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காவல் நிலையத்தில் அகதிகளை, புலனாய்வுத்துறையினர், கஸ்டம்ஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்தீவிர விசாரணைக் செய்தனர். பிறகு மண்டபம் அகதிகள் முகாமிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான சரசம்மா என்பவர் இலங்கையில் ராணுவத்தினரின் கொடுமை தாங்க முடியவில்லை. 30வயதிற்கு குறைவான ஆண்களை ராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று துன்புறுத்துகிறார்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டால் புலிகள் மீது பழியைப் போட்டு விடுகிறார்கள். தொடர்ந்து இதேமாதிரி தொடர்வதால் இந்தியாவுக்கு வந்துவிட்டோம் என்றார்.

சனிக்கிழமை தனுஷ்கோடி காவல் நிலையம் வந்த 46 பேர் இரவில் காவல்நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு,அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்பு மண்டபம் முகாமுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்தஅகதிகள் வந்த படகை இந்திய கடற்படையினர் கைப்பற்றி ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர்.

122 அகதிகள் தப்பினர்:

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை மண்டபம் முகாமில் இருந்து 109குழந்தைகள் உட்பட 387 அகதிகள் வேலுர் மாவட்ட முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 509அகதிகளை வேலூர் மாவட்டத்திற்கு அனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 122 அகதிகள்மண்டபம் முகாமில் இருந்து தப்பிவிட்டனர்.

கடந்த 2 வாரங்களில் 2 ஆயிரத்து 685 அகதிகள், மண்டபத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களுக்குமாற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+