கு-ரோ-னி-யே பணம் தர்-ர-தா சொன்னாரு...குளூஸ்னர், பெளச்சர் பு-கார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பிரிட்டோரியா:
மோசமாக விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே,பணத்துடன் தங்களை அணுகியதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் லேன்ஸ் குளூஸ்னர் மற்றும்விக்கெட் கீப்பர் மார்க் பெளச்சர் ஆகியோர் கூறியுள்ளனர்.
கேப் டவுன் நகரில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான கிங் கமிஷன் விசாரணை நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமைகமிஷன் முன்பு இருவரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
பெங்களூரில் கடந்த மார்ச் மாதம் நடந்த இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, நாங்கள்இருவர் மற்றும் மற்றொரு ஆல்ரவுண்டரான ஜேக்ஸ் கல்லிஸ் ஆகிய மூவரையும் குரோனியே அணுகினார்.
இரண்டாவது போட்டியில் நான் சொல்வது போல விளையாடினால் உங்களுக்குப் பணம் கிடைக்கும் என்றுகுரோனியே கூறினார். ஆனால் நாங்கள் அதை ஜோக்காக கருதினோம். ஆனால், இந்த ஏப்ரல் மாதம் மேட்ச்பிக்ஸிங் புகார் தொடர்பாக அவர் கேப்டன் பதவியை விட்டு நீக்கப்பட்ட பிறகுதான் அன்று கூறியது உண்மைஎன்று புரிந்து கொண்டோம் என்றனர்.
குளூஸ்னர் தொடர்ந்து கூறுகையில், 1996-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு போட்டியில் தோற்கும் வகையில்விளையாடுமாறு அணி வீரர்களுக்கு குரோனியே அறிவுறுத்தினார். அப்போதே அதுகுறித்து சீரியஸாகநடவடிக்கை எடுத்திருக்கலாம்.
குரோனியே குறித்து டெல்லி போலீஸுக்கு நான் தகவல் ஏதும் கொடுக்கவில்லை. டெல்லி ஹோட்டலில், எனக்கும்குரோனியேவுக்கும் நடந்த தகராறு குறித்து கூறவும் விரும்பவில்லை. குரோனியேவுடனான எனதுபிரச்சினைகளைத் திரும்பிப் பார்க்க நான் தயாரில்லை என்றார்.
கடந்த வாரம்தான் ஹெர்சல்லி கிப்ஸ், பீட்டர் ஸ்டிரைடம், பந்தவீச்சாளர் ஹென்றி வில்லியம்ஸ் ஆகியோர்தங்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக கூறினர். அனைவரும் தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications