கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கீர்த்திவாசன் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தென்னக ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசனின் வீட்டில் சி.பி.ஐ. சோதனையின்போதுகைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்கள் மற்றும் தஸ்தாவேஜுகள், சென்னை 9-வதுகூடுதல் நீதபதி பிரடெரிக் கனகராஜ் முன்பு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஜூன் 9-ம் தேதி கீர்த்திவாசன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.கீர்த்திவாசன் தவிர, ரயில்வே காண்டிராக்டர் பழனி, பாலக்காடு கோட்ட ரயில்வேமேலாளர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் இறுதியில், கீர்த்திவாசன் வீட்டிலிருந்து, ரூ. 2,02,000 பணம், 894அமெரிக்க டாலர்கள், 800 டிராவலர்ஸ் செக்குகள், முதலீடுகள், சொத்துக்கள், பங்குகள்,வங்கிப் பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜூன் 7-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கீர்த்திவாசன் உள்பட ஏழு பேர் மீது முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது குற்றச் சதி, மோசடி, போர்ஜரி, ஏமாற்றும்நோக்கத்தில் மோசடி செய்வது, ஆவணங்களை மாற்றியது, ஊழல் தடுப்பு ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1995-96ல் அகல ரயில் பாதை போடும் பணியின்போது ஜல்லி வாங்கியதில் ஊழல்செய்ததாகவும், இதனால் ரயில்வேக்கு ரூ. 58.70 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும்கீர்த்திவாசன் மீது புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. கண்காணிப்புபோடப்பட்டது. இறுதியில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிறர்: அக்னிஹோத்ரி (முன்னாள் பொதுமேலாளர்), ஆர்.எஸ்.நாராயணன் (ஓய்வு பெற்ற நிதி ஆலோசகர்), சேதுராமன் (முன்னாள்கூடுதல் பொது மேலாளர்), எஸ்.ராமசுப்ரமணியம் (சிக்னல் மற்றும் டெலிகாம் தலைவர்).
என் மீது புகார் இல்லை: கீர்த்திவாசன் மறுப்பு
இதற்கிடையே, தன் மீது இதுவரை புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றுகீர்த்திவாசன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், காண்டிராக்ட் விடும்பணிகள் குறித்து ரயில்வேயில் தெளிவான விதிமுறைகள், வழிமுறைகள் உள்ளன.அனைத்து காண்டிராக்ட்களும், ஒட்டுமொத்த முடிவின் அடிப்படையிலேயேஎடுக்கப்பட்டன.
எந்த அதிகாரி மீதும் கூறப்படும் புகார்கள், விசாரணை முடிந்த பிறகே நிரூபிக்கப்படும்.விசாரணைக்கு முன்பே ஒரு அதிகாரியை குற்றம் சாட்டுவது நியாயமற்றது.
ரயில்வேயில் 36 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். 1979 முதல் 99 வரையிலானஎனது வருமான்ம் ரூ. 90 லட்சம் ஆகும்.
எனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்த பிறகு, என்னைக் குறித்து பத்திரிகைகள்,டி.விக்களில் வரும் செய்திகள் பொய்யானவை, உண்மைக்கு மாறானவை என்று அவர்கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications