கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அய்யா வாங்க...உக்காருங்க.
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அம்மா அருக்காணி கொஞ்சம் காப்பித் தண்ணிய கொண்டாத்தா.
அதுல பாருங்க...நம்ம ஊருல எதுக்கு எடுத்தாலும் பாட்டுதான். பொறந்தாலும் பாட்டு, செத்தாலும் பாட்டு.
பொறந்தவுடன, ஆணா இருந்தா எட்டுக் கட்டயில பாடுவாங்க. அதுவே பொண்ணாப் பொறந்துட்டா, கொஞ்சம் சொரம் கம்மியாயிரும். ஆனா பாட்டுகண்டிப்பா இருக்கும்.
நம்ம ஊருல பாட்டுங்க பல விதங்க. குலவப் பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, கும்மிப் பாட்டு இப்படிப் போகும்.
மாரியாத்தாளுக்கு கூழு ஊத்துறது, தேரோட்டம் இப்படி திருவிழாக் காலங்கள்ள குலவப் பாட்டைக் கேக்கலாம். அப்பறம், பொண்ணு குத்த வக்கிறது,கல்யாணம் இப்படி விசேஷங்கள்ளயும் குலவப் பாட்டு இருக்கும். பொதுவா மங்கள காரியம் எதுவாயிருந்தாலும் குலவப் பாட்டு கண்டிஷனா இருக்கும்.
தாலாட்டுப் பாட்டப் பத்திச் சொல்ல வேண்டாம். பொறந்ததுலயிருந்து, அந்தப் பிள்ளை ஆத்தா முந்தானைய விடுறது வரக்கும் தெனக்கும் வீட்டுலதாலாட்டுத்தான். அதுலயும், நம்ம கிராமத்துப் பக்கத்துல, 70 வயது ஆனா கூட பிள்ளக்கித் தாலாட்டுப் பாடற ஆத்தாக்கத்தான் அதிகம்.
கிராமத்துப் பக்கம் போனா நெறய தாலாட்டுப் பாட்டுங்க கேக்கலாம். ரொம்ப ரம்மியமா இருக்கும். கேட்டாலே, கண்ணெல்லாம் சொக்கும்.தூக்கமா வரும். நமக்கே இப்படின்னா, பொறந்த பச்சை மண்ணுக்கு எப்படி சொகமா இருக்கும்.
சரி. தூங்காதீங்க. இன்னொன்னு சொல்றேன்.
கும்மிப் பாட்டு தெரியுமா உங்களுக்கு . அருமையான பாட்டுங்க. கிராமத்துக்காரனுக்கு அடையாளமே இப்படிப்பட்ட செல பாட்டுங்கதான். வட்டமாபொம்பளப் புள்ளங்க நின்னுக்கிட்டு கும்மியடிச்சுக்கிட்டே பாடுங்க. நின்னு நிதானமா ரசிக்கலாம். சில நேரம், அடுத்த வீட்டு ரகசியத்துக்கூட பாட்டுக்குமத்தியிலே எடுத்து விடுவாங்க. ரொம்ப விவகாரமான பாட்டுங்க இது.
செத்தா ஒப்பாரிப் பாட்டு.
எட்டு ஊரு ஆண்டு வந்த ஏ ராசா
என்ன விட்டுப் போனியே ஏன் ராசா
தன்னந்தனியா நான் என்னத்தப் பண்ண
பக்கிப் புள்ளங்க கொத்திப்புடுமே
நீ பாட்டுக்குப் போனியே
நான் பாட்டுப் பாடுறனே
வெரசா வா ராசா
வாசலுல காத்திருக்கேன்...
இந்த ரேஞ்சுல போகும் ஒப்பாரிப் பாட்டு.
கிராமத்துப் பாட்டுங்களுக்கு கணக்கே இல்ல சாமி. அது பாட்டுக்குப் போகும்.
ஏதோ கொஞ்சமா பாத்தீங்க. அடிக்கடி இங்க வாங்க. நெறய பாட்டுங்களப் பத்திச் சொல்றேன்.
அப்ப உத்-த-ர-வு வாங்-கிக்-கி--றன்....
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications