""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
இந்தியாவில் பெண் மனித வெடிகுண்டுகள்: ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியாவில் முக்கிய நகரங்களில் பெண் மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதாகஉளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கார்கில் போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இன்னொரு போர் நடத்த பாகிஸ்தானிடம் வலு இல்லை. இதனால் குறுக்கு வழியில், பெண்மனிதவெடிகுண்டுகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஊடுருவ விட்டு அதன் மூலம் அங்கு வன்முறையைத் தூண்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்தியபுலனாய்வுத் துறை தகவல்களில் தெரிய வந்துள்ளது.
இதற்காக காஷ்மீர் தீவிரவாதிகள், கூலிப்படையினர், வெளிநாட்டுத் தீவிரவாதிகள் ஆகியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயங்கரவாதபயிற்சியை ஐ.எஸ்.ஐ. அளித்து வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் வாழும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக ஆயுதப்பயிற்சி கொடுத்துவருகிறது.
மேலும், விடுதலைப்புலிகள் பாணியில் பெண்மனித வெடிகுண்டுகளை ராஜஸ்தான் மாநிலத்தில் ஊடுருவ விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராஜஸ்தான் மாநிலம், நச்னா மற்றும் மோகன்கார் பகுதிகளிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பாகிஸ்தான் சென்றனர்.
3 முதல் 6 மாதங்களுக்கான சுற்றுலா விசா கார்டு வாங்கிக் கொண்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்காகச் சென்றனர்.இந்திய அரசின் முறையான அனுமதி பெற்று பாகிஸ்தான் சென்ற இவர்களில் பலர் அங்கேயே திருமணம் செய்து கொண்டு தங்கி விட்டனர்.
அவர்களில் சிலர் மீண்டும் இந்தியா திரும்பிவிட்டதாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஆனால் உண்மையில் வந்தது அவர்கள் அல்ல என்று தற்போதுதெரிய வந்துள்ளது. மே மாதம் இதேபோல 3 பெண்கள் இந்தியா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்ல என்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று பெண்களுக்குப் பதிலாக பயிற்சி பெற்ற பெண் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். பர்தாஅணிந்திருப்பதால் இவர்களை உள்ளூர் மக்களே கூட எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல, மோகன்கார் கிராமத்தைச் சேர்ந்த சபாய், குடி ஆகிய இரு பெண்களும் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் இவர்கள் உண்மையான சபாய், குடி அல்ல என்று அவர்களது நெருங்கிய உறவினர்களே தெரிவிக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டில்லி, மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் பெண்மனிதவெடிகுண்டுகளை பாகிஸ்தான் ஏவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பெண் மனித வெடிகுண்டு குறித்த தகவல்கள் வந்துள்ளதால் நாடு முழுவதும் உளவு அமைப்புகளும், பாதுகாப்புப் படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications