1999-ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக இந்திய கல்வியாளர் தேர்வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கட்டாக்:
1999-ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக ஒரிஸாவைச் சேர்ந்த சிறந்த கல்வியாளரும், ஆராய்ச்சியாளருமானவசந்தி தே சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும்அமெரிக்காவில் உள்ள "பயோகிராஃபிகல் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு சிறந்த பெண்மணியாக வசந்தி தேசக்ரவர்த்தியைத் தேர்வு செய்துள்ளது.
50 வயதான வசந்தி தே சக்ரவர்த்தி உத்கல் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். தற்போது,அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் கனெக்டிகட் ஸ்டேட் யூனிவர்சிடியில் ஆசிரியர் கல்வித் துறையில் உதவிபேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தனது கல்விப் பணியில் சிறப்பாக சேவையாற்றியதற்காக இப் பெருமை மிகு விருதுக்கு அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கல்வித் துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். 20-ம் நூற்றாண்டின்2000 சிறந்த நபர்களில் ஒருவராக வசந்தி தே சக்ரவர்த்தியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச பயோகிராபிகல்மையம் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications