கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிகார் படுகொலை: 11 பேர் கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாட்னா:

பிகாரில் ரன்வீர் சேனா அமைப்பினரால் 35 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நடந்த இப் படுகொலை தொடர்பாக, மாநில டிஜிபி நீல்மணி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்போலீஸ் படையினர் அவுரங்காபாத்,ஜானாபாத் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி மேற்கண்ட 11 பேரைக் கைது செய்தனர். மேலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள்ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், பிகார் ராணுவத்தினர் ஆகியோர் சேனா அமைப்பினர் மறைந்திருக்கும் இடங்களில் தீவிரமாய் சோதனை நடத்திவருகின்றனர். படுகொலை நடந்த மியாப்பூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக படுகொலை நடந்த இடத்தை நாடாளுமன்ற பாஜக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்ஏ. நக்வி நேரில் சென்றுபார்வையிட்டார்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற