தமிழகத்தில் இன்று
நடிகர் பார்த்திபன் கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நடிகர் பார்த்திபனை பார்க்க அனுமதி மறுத்ததால் அவரது கார் கண்ணாடியை உடைத்த ரசிகரை போலீஸ் கைதுசெய்தனர்.
நடிகர் பார்த்திபனின் அலுவலகம் சென்னை கே.கே.நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வாலிபர்ஒருவர் அங்கு வந்து நடிகர் பார்த்திபனைப் பார்க்க வேண்டும் என்றார்.
அலுவலகத்தில் மானேஜர் சின்னசாமி மட்டுமே இருந்தார். அவர் பார்த்திபன் அலுவலகத்தில் இல்லை என்றுகூறினார். இதனால் அந்த வாலிபர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பிய அவர் மீண்டும் பார்த்திபனைப் பார்க்க வேண்டும் என்றார். ஆனால் பார்த்திபன்இல்லாததால் மானேஜர் சின்னசாமி அவர் இல்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர் அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விலையுயர்ந்த கார்கண்ணாடிகளை உடைத்தார். அந்த நேரம் அங்கு நடிகர் பார்த்திபன் வந்தார். உடனடியாக அவரும்,மானேஜருமாகச் சென்று அந்த வாலிபரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
வாலிபரின் பெயர் முருகேசன் (32) என்றும் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகபுரத்தைச்சேர்ந்தவர் என்றும், முன்பும் இதேபோல, இயக்குநர் பாலச்சந்தரின் கார் கண்ணாடியை உடைத்த "அனுபவம்பெற்றவர் என்றும் தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications