தமிழகத்தில் இன்று
சாவு வீட்டில் விஷச் சாராயம் அருந்திய 2 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மன்னார்குடி:
தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே, சாவுக்குப் போன வீட்டில் விஷச்சாராயம் குடித்ததில் 2 பேர் இறந்தனர்.
மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான். இவரது தாயார் 15 நாட்களுக்கு முன் இறந்தார். இதற்காக சனிக்கிழமை ஈமச்சடங்கு நடந்தது.இந்தச் சடங்கில் அவரது உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஈமச்சடங்கு முடிந்த பின் விருந்து நடந்தது. அதற்குப்பின் சாராயம் அருந்தினர். சாராயம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது. வயிற்றுவலியால் துத்தனர். சிலருக்கு வலிப்பும் வந்தது.ஏற்பட்டது.
10 பேர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். அவர்கள் உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும்பலனின்றி தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சண்முகம் என்பவரும், ரத்தினம் என்பவரும் இறந்தனர். 8 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது.
சாராயம் என்ற பெயரில் விஷச்சாராயத்தைக் கொடுத்தது தொடர்பாக ஜெயபால் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஜெ.கண்டனம்: விஷச் சாராயத்திற்கு 2 பேர் இறந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கருணாநிதி ஆட்சியில்கள்ளச்சாராயம் வெள்ளமாய் ஓடுகிறது. ஆங்காங்கே விஷச்சாராயச் சாவுகள் விழுகின்றன. மன்னார்குடி அருகே விஷச்சாராயம் குடித்தவர்கள் பலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குரியது.
கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றபோது கள்ளச்சாராயப் பானைகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயும் என்று வீர வசனம் பேசினார். ஆனால் மாநிலம்முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொழில்போல் நடக்கிறது. கருணாநிதியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்கமுடியவில்லை.
மன்னார்குடியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க அரசு உத்தரவிடவேண்டும். கருணாநிதி ஆட்சியில் கள்ளச்சாராயம்ஆறாய்ப் பெருகி ஓடுவதையும், அதனால் ஏற்படும் பலியையும் வன்மையாய்க் கண்டிக்கிறேன் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications