தமிழகத்தில் இன்று
அர--சாங்-கத்-தில் புலிகளுக்-கு -இ-ட-மில்-லை: சந்-தி--ரி-கா ம-றுப்-பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து அமைக்கப்படும் இடைக்கால மாகாணக் கவுன்சில் அரசில், விடுதலைப் புலிகளுக்கு இடம் கிடையாது என்றுஇலங்கை அரசு கூறியுள்ளது.
இலங்கை அரசின் இந்த முடிவால், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே, இப்போதைக்கு அமைதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை சாத்தியமில்லைஎன்று தெரிகிறது.
இடைக்கால அரசு குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பதிவு செய்யப்பட்டஅரசியல் கட்சிகள் மட்டுமே இடைக்கால அரசில் பங்கேற்க அனுமதிக்க முடியும். இந்த இடைக்கால அரசு சில காலம் நீடிக்கும்.அதன் பிறகு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இடைக்கால அரசில் சேர்க்க முடியாது என்று அதிபர் சந்திரிகா திட்டவட்டமாக கூறி விட்டார். இருப்பினும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, பொது வாழ்க்கைக்குத் திரும்பினால், அவர்களையும் இடைக்கால அரசில் சேர்க்க முடியும் என்று அதிபர்சந்திரிகா கூறியுள்ளார்.
இந்த முடிவின் மூலம் விடுதலைப் புலிகளிடம் இறங்கிப் போவது என்ற தனது நிலையை அதிபர் சந்திரிகா வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இடைக்கால அரசில் புலிகளுக்கு இடமில்லை என்று கூறியுள்ளதன் மூலம் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்தத்தில்ஈடுபட்டுள்ள நார்வே நாட்டின் முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிக உரிமைகள் தரக் கூடாது என்ற சிங்களர்களின் பிடிவாதப் போக்கு காரணமாகவே, அதிபர் சந்திரிகா இந்த அறிவிப்பைவெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில், நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், சிங்களர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், விடுதலைப் புலிகளுக்கு இடைக்காலஅரசில் இடமில்லை என்று சந்திரிகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பலப்படுத்திக் கொள்வதிலும் அவர் ஆர்வமாக இல்லை என்றுதெரிகிறது.
தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது, ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு பங்கு தருவது ஆகியவற்றிற்கு சிங்கள அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. அப்படி நடந்தால், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகும் என்றும் அவை எச்சரித்திருந்தன.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலின்போது, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்கேவுக்கு எதிரான பிரசாரத்தின்போது,விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பொறுப்பின் கீழ், வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைக்க விக்கிரமசிங்கே திட்டமிட்டு வருகிறார் என்று சந்திரிகாபுகார் கூறியிருந்தார்.
ஏமாற்றத்தில் தமிழ் அரசியல்வாதிகள்:
இடைக்கால அரசில் புலிகளைச் சேர்க்க அதிபர் சந்திரிகா மறுத்து விட்டதால், நீண்ட காலமாக இலங்கைக்குத் தலை வலியாக இருந்து வரும் தமிழர்பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கவலை அடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று கோரி வரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சியின துணைத் தலைவர் அனந்த சங்கரிகூறுகையில், இடைக்கால அரசில் விடுதலைப் புலிகளை சேர்ப்பதில்லை என்று அரசு முடிவெடுத்திருப்பது விநோதமாக உள்ளது. புலிகளுடன் பேசுங்கள் என்றுகூறும் சர்வதேச சமுதாயத்திற்கு இப்போது இலங்கை அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?.
புலிகளுடன் பேச்சு நடத்த ஒரு மத்தியஸ்தரை (நார்வே) ஏற்பாடு செய்து விட்டு, இப்போது பேச்சுவார்த்தைக்கான கதவுகளை சந்திரிகா அடைத்து விட்டார்.இது புரியவில்லை என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இடைக்கால அரசுக்கு விடுதலைப் புலிகள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, துவக்க நிலையிலேயே, அவர்களது கருத்தைக்கூட கேட்காமலேயே நிராகரித்திருப்பது சரியல்ல.
வட கிழக்கு மாகாணக் கவுன்சில் அமைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளையும் அரசு கலந்து பேச வேண்டும். இல்லாவிட்டால் தமிழர் பிரச்சினைக்குத்தீர்வு காண்பது சாத்தியமானதல்ல என்றார் அவர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications