தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அனுமதி பெறாத கட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க புதிய திட்டம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சென்னையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3121 கட்டடங்களுக்கு "கட்டடவரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிப்பது என்று அரசு முடிவுசெய்துள்ளது.

இத்தகவலை போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்முடி திங்கள் கிழமைதெரிவித்தார்.

சென்னை நகரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி பெறாமல்கட்டப்படும் கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டு வந்தன. இதனால் பல கோடி ரூபாய்இழப்பு ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதற்கு கட்டடங்கள்வரன்முறைப்படுத்துல் திட்டம் என்று பெயர்.

இத்திட்டப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள்அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளை மீறாத பட்சத்தில் அந்த கட்டடத்திற்கு அரசு நிர்ணயிக்கும்கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டும். பின்னர் அரசு பரிசீலித்து அந்தகட்டடத்திற்கு ஒப்புதல் அளிக்கும்.

இத்திட்டப்படி அரசு நிர்ணயித்த கட்டணம் அதிகம் இருப்பதாக பலர் கருத்துதெரிவித்தனர். இதுபற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பொன்முடி தலைமையில்கூட்டம் நடைபெற்றது. 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பொன்முடி கூறுகையில், இத்திட்டத்தின் கீழ்மொத்தம் 5473 கட்டடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 3121கட்டடங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 1932 கட்டடங்களுக்கு ஒப்புதல்மறுக்கப்பட்டு விட்டது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 3121 கட்டடங்களின் மூலம் 380 கோடி ரூபாய் வரிவசூலித்திருக்க வேண்டும். ஆனால், 5 கோடியே 41 லட்ச ரூபாய் தான்வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+