181 ரன்களில் சுருண்டது இலங்கை - அப்துர் ரஸாக் ஹாட்-ரிக் சாதனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்லே:
பாகிஸ்தானுக்கு எதிராக கல்லேயில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாளானபுதன்கிழமை இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ரஸாக் சிறப்பாகப் பந்து வீசி ஹாட்-ரிக் சாதனைபுரிந்தார். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 18 ரன்களுக்கு இலங்கை அணியின் கடைசி 6விக்கெட்டுகள் வீழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. அணியின் எண்ணிக்கை 13 ஆக இருந்தபோது துவக்கஆட்டக்காரர் அட்டபட்டு அவுட்டானார். அவரில் தொடங்கிய அணியின் சரிவு 181 ரன்னில் முடிவுற்றது.இடையில், ஜயவர்தனேயும் ரணதுங்காவும் ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடினர்.
இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். ஜயவர்தனே 72 ரன்களும், ரணதுங்கா 51 ரன்களும்எடுத்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக கேப்டன் ஜெயசூர்யா 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கஎண்களில் அவுட்டானார்கள். 163 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இலங்கை 181 ரன்களில்சுருண்டது.
பாகிஸ்தான் அணியின் அப்துர் ரஸாக் வரிசையாக கலுவிதரன, ஹீரத், புஷ்பகுமாரா ஆகியோரை அடுத்தடுத்த 3பந்துகளில் அவுட்டாக்கி ஹாட்-ரிக் சாதனை புரிந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்-ரிக் எடுத்த இளம் வீரர் என்றபெருமையையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்-ரிக் சாதனை புரிந்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்றபெருமையையும் அவர் பெற்றார். பாகிஸ்தான் அணியின் வாஸிம் அக்ரம் ஹாட்-ரிக் சாதனை புரிந்த மற்றொருவீரர்.
அப்துர் ரசாக் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், வக்கார் யூனிஸ் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசார்மெஹ்மூத் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இலங்கையை 181 ரன்களுக்குச் சுருட்டிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆட்ட நேரமுடிவில் பாகிஸ்தான் 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. வாஸிம் 29 ரன்களுக்கும்,அசார் மெஹ்மூத் 0 ரன்களிலும் அவுட்டானார்கள். சயீத் அன்வர் 42 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications