பள்ளித் தோழியை ரக-சி-ய-மாய் மணந்-தார் அஜய் ஜடேஜா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, இளம் வயதில் பள்ளியில் தன்னுடன் படித்தவரும் பரதநாட்டியக்கலைஞருமான அதிதி ஜேட்லியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டஇருவரும் தற்போது லண்டனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக அழகான இளைஞரான அஜய் ஜடேஜா அறிமுகமானார். எப்போதுஅவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றாரோ அன்று முதல் இன்று வரை அவரையும், ஏதாவது ஒருஹிந்தித் திரைப்பட நடிகைகள் பல-ரை-யும் இணைத்து அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
இது தவிர, ஜடேஜா அவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரைத் திருமணம் செய்து கொண்டார் என்றுபத்திரிகைகளில் பலவாறாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஒவ்வொருமுறையும் இச் செய்திகளை ஜடேஜாமறுத்துவந்தார். எனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. எனக்குத் திருமணம் நடந்தால் அதுஎல்லோருக்கும் தெரிந்தே நடக்கும் என்று அறிவித்தார் ஜடேஜா.
இந் நிலையில், சமாதா கட்சித் தலைவர்களி-ல் -ஒ-ரு-வ-ரா-ன ஜெயா ஜேட்லியின் மகள் அதிதி ஜேட்லியை ஜடேஜாதிருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் செய்தியை ஜடேஜாவின் நண்பர்கள் உறுதிசெய்தாலும், ஜடேஜா மற்றும் அதிதியின் குடும்பத்தினரிடமிருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
பள்ளியில் படிக்கும் தன்னுடன் படித்த அதிதியை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும் இருவருடையகுடும்பத்தினரும் இத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாகவும் -தன்னிடம் ஜடேஜா கூறியதாக அவரது நெருங்கியநண்பர் தெரிவித்தார். தான் ஒரு ஹிந்தித் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதுவரை தனதுதிருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை என்றும் ஜடேஜா கூறியதாக அவர் தெரிவித்தார்.
சோனாலி பேந்ரேயுடன் ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க ஜடேஜா ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இன்னும் இப் படத்தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை.
தான் திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகிவிட்டால் தனது பப்ளிசிடியும் ஸ்டார் -வேல்-யூ-வும்பாதிக்கப்படும் என்பதால் தனது திருமணச் செய்தியை வெளியிட ஜடேஜா விரும்பவில்லை. ஆனால், நவம்பர்மாதத்துக்குள் படத் தயாரிப்ப தொடங்கப்படவில்லை என்றால் அதன்பிறகு தனது திருமணத்தை ஜடேஜாபகிரங்கமாக அறிவிக்க இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகவே ஜடேஜாவும், அதிதியும் பழகி வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே வேறு எந்தத்தொடர்பும் இல்லை என்றும், இருவரும் நண்பர்களாகவே பழகுகின்றனர் என்றும் இருவருடைய குடும்பத்தினரும்தெரிவித்தனர். ஆனால், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளது பெரும் ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.
பழகியபோதே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில்தான் இருவரும் இருந்துள்ளனர் என்று நண்பர்களின்செய்திகளில் இருந்து தெரியவருகிறது. உதயா பார்க்கில் ஜடேஜா கட்டியுள்ள புதிய வீட்டுக்கு அதிதி அடிக்கடிவருவார் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், வீடு கட்டப்பட்டபோதே அடிக்கடி அங்கு வந்த வீட்டைஅழகுபடுத்துவது தொடர்பாக பல யோசனைகளைக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா நடத்தி வரும் ஜடேஜா கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை ஜடேஜாவின் சகோதரர் அஜித்துடன்இணைந்து அதிதி கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications