தமிழகத்தில் இன்று
மலேசியா: அன்-வர் இப்-ரா-கிம் மீதா-ன செக்ஸ் வழக்கில் ஜூலை 6-ம் தேதி இறுதி விசாரணை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோலாலம்பூர்:
மலேசிய முன்னாள் து-ணைப் பிர-த-மர் அன்வர் இப்ராஹிம் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கு இறுதிக் கட்டத்தைநெருங்கிவிட்டது. ஜூலை 6-ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதமர் மஹாதிர் மொகம்மது தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவு-ம் து-ணைப் பி-ர-த-ம-ரா-க-வும்இருந்த அன்வர் இப்ராஹிம் மீது பலவித செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, 1998-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்-னர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு அவருக்கு1999-ம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அவரது குற்றம்நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 20 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்.
தற்போது செக்ஸ் குற்றச்சாட்டில் அன்வர் இப்ராஹிமின் தரப்பில் நீதி-மன்-றத்-தில் விள-க்-கம் அளிக்-கப்-பட்-டு-விட்-ட-து.எங்களைப் பொறுத்தவரை விசாரணையை முடித்துவிட்டோம் என்று இப்ராஹிமின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர்தெரிவித்தார்.
இவ் வழக்கில் ஜூலை 6-ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. அதற்கான பணியில் நீதிமன்றஅலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடந்த விசாரணையின் எழுத்துப் பிரதிகள் ஜூலை 6-ம் தேதிநீதிபதியிடம் அளிக்கப்படும். அதன்பிறகு நீதிபதி தீர்ப்பு கூறுவார் என்று உயர்நீதிமன்ற மூத்த துணை பதிவாளர்ரோசிலா சல்லா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications