தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

"மூப்-ப-னார் மு-தல்-வ-ரா-க-னும்": இ-து சினி-மா தலைப்-பல்-ல, சு-வா-மி-யின் வி-ருப்-பம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

மூப்பனாரை தமிழக முதல்வராக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வைகோ சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய தூதராக பொறுப்பாளர் டான்ஸ்டேவை சந்தித்து அந்நாட்டு ராஜதந்திரி டேவிட் மட்னாய் கொல்லப்பட்டசம்பவத்தில் பிரபாகரனை மன்னிக்குமாறு கேட்டுள்ளார்.

திமுகவும், அதிமுகவும் புலிகளுக்கு ஆதரவான கட்சிகள். எனவே அதிமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மூப்பனார் போன்றோர் வெளியேறவேண்டும். மூப்பனாரை முதல்வராக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்தத் திட்டப்படி மூப்பனார் தலைமையில் புது அணியை உருவாக்க முயற்சிசெய்வேன். புலிகளின் ஆதரவாளரான வீரமணி கூட்டிய கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி கலந்து கொண்டதால் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் என் மீதான வழக்கை தள்ளுபடி செய்த பின்பும் புதுக்கோட்டை செசன்ஸ் நீதிபதி சாரங்கராஜன் எனக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார்.இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். என்னைக் கொலை செய்ய கருணாநிதி, அத்வானி, ராமதாஸ் ஆகியோர் போட்டுள்ள கூட்டு சதிதான் இதற்கு காரணம் என்று கருதுகிறேன்.

சீன பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை நான் சீனா போகிறேன்.

இவ்வாறு சுப்ரமணியசாமி நிருபர்களிடம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+