தலாக்... தலாக்... மறுமணம் வரை ஜீவனாம்சம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">முஸ்லீம் இனப் பெண்கள் விவாகரத்தானால் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் வரை வரைஅவர்களுக்கு ஜீவானம்சம் வழங்கப்படும் என்று கல்கத்தா ஹைகோர்ட் தீர்ப்பளித்தது.

கல்கத்தாவைச் சேர்ந்தவர் ஷகிலா பர்வீன். இவரை இவரது கணவர் ஹைதர் அலி 1993 ம் விவாகரத்து செய்தார்.இதனால் இவர் தனது சொந்த ஊருக்கு அருகே சில்டாக் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இவரது வழக்கு குறித்து விசாரிப்பதற்காக ஹைதர் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவரோகோர்ட்டுக்குப் பெப்பே காட்டி விட்டார்.

இதையடுத்து ஷகிலாவுக்கு 3 மாத கால இத்தா தொகையாக ரூ 800 ம், மஹர் தொகையாக ரூ 2500 ம்வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஷகிலா கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிபானிகிரஹி,

1986 ம் ஆண்டு முஸ்லீம் இனப்பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திருமணச் சட்டத்தை உதாரணம் காட்டிவிவாகரத்தான பின் முஸ்லீம் இனப்பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்வை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும்,அவர்களுக்கு அடுத்த திருமணம் நடக்கும் வரை ஜீவனாம்சம் வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+