தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தேர்தலுக்குத் தயாராகிறது தி.மு.க.

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலைச் சந்திக்கத் திமுக தயாராகிறது.

தனது உடல் நிலத்தையும் பொருட்படுத்தாமல் அரசுத் திட்டப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் தீவிரப்படுத்த முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.இரண்டாவது கட்டமாக கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை சென்னையில் வெள்ளிக் கிழமை கூட்டியுள்ளார்.

முதல் கட்டமாக மே மாதம் மாவட்டக் கலெக்டர்களின் இரண்டு நாள் மாநாட்டை சென்னையில் கூட்டி, அரசுத் திட்டப் பணிகளை முழு வீச்சில் முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

6 மாதங்களுக்குள் அரசு அறிவித்த எல்லாத் திட்டப் பணிகளையும் முடிப்பதுடன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிமேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் செய்து முடிப்பதில் கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டுகிறார். கடந்த நான்கு நாட்களாக முதுகுத் தண்டில்ஏற்பட்ட வலி காரணமாக தொடர் சிச்சையில் இருந்தார் முதல்வர். ஓரளவு குணமான நிலையில், இந்தக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 11 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 9 பேரும், 160க்கும் மேற்பட்ட சட்டமன்றஉறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். இவர்களில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களும் அடங்குவர்.

தேர்தலை சந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் கட்சி இருப்பதையும், அரசின் திட்டப் பணிகளும், கட்சிப் பணிகளும் எத்தகைய வேகத்தில் செய்து முடிக்கப்படவேண்டும் என்பதையும் இந்த கூட்டத்தில் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு உணர்த்த கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.

ஆமை வேகத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விட்டால் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று முதல்வர்கருதுகிறார்.அவரது கருத்துப்படி கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்புக்குஒத்துழைக்காதவர்கள் யார் என்ற விவரத்தையும் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் அவர் வெளியிடவிருக்கிறார். அவர்களை கடுமையாக எச்சரிக்கவும்அவர் முடிவு செய்துள்ளார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் தேர்தலை சந்திப்பது குறித்தும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்கிறார் முதல்வர். முன் கூட்டியே தேர்தலை சந்திக்கலாமாஅல்லது பதவிக் காலம் முடிந்த பின்னர் சந்திப்போமா, தேர்தல் வந்தால் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது போன்றகேள்விகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை சந்திப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அவர் கட்சியினரிடம் எடுத்துக் கூறி, கருத்துக்கள் கேட்க முடிவுசெய்துள்ளார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் திமுகவின் தேர்தல் வியூகம்அமையும் என்று அண்ணா அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+