For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தீவி-ர-ம-டை-கி-ற-து கோவை எம்.பி.- போலீஸ் கமிஷ்-னர் -மோ-தல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோவை பாரதீய ஜனதா கட்சி எம்பி ராதாகிருஷ்ணனுக்கும், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையேபனிப்போர் தீவிரமடைந்துள்ளது.

போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அடுத்த கட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோவை எம்பி ராதாகிருஷ்ணன் தில்லி விரைந்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த பாஜக தொண்டர் சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி ஊர்வலத்தில்எம்பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

வன்முறை அடிக்கடி நிகழும் பகுதி வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற இருந்ததால் ஏதாவது அசம்பாவிதம்நடைபெறலாம் என்ற முன்னெச்சரிக்கையில் ஊர்வலத்தை போலீஸ் போட்டோகிராபர் பங்கஜ் குமார் வீடியோவில்படம் பிடித்தார்.

ஊர்வலத்தைப் படம் பிடிக்கவேண்டாம் என்று எம்பி ராதாகிருஷ்ணனும், சோமசுந்தரத்தின் உறவினர்களும்கேட்டுக்கொண்டனர். ஆனால், பங்கஜ் குமார் தொடர்ந்து படம் பிடித்தார். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் பங்கஜ்குமார் தாக்கப்பட்டார். அவரது வீடியோ கேமராவும் சேதமடைந்தது.

இதையடுத்து அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக எம்பி ராதாகிருஷ்ணன் மற்றும் சோமசுந்தரத்தின்உறவினர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தெரிந்து கொண்ட எம்பி ராதாகிருஷ்ணன் உடனே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின்னர், மாநிலம்மற்றும் மத்திய தலைமையிடத்துக்கு உடனடியாகத் தகவல் பறந்தது. பிரதமர் அலுவலகமே இப் பிரச்சினையில்நேரடியாகத் தலையிட்டு, பிரச்சினையை சுமூகமாகப் பேசித் தீர்க்கும்படி கூறியுள்ளது.

அதே நேரத்தில், சென்னையில் மாநில பாரதீய ஜனதா கட்சியின் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில், மாநிலநிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வளர்ச்சி குறித்தஆலோசனையை விட, கோவை எம்பி. மீது தொடரப்பட்டவழக்கு குறித்து தீவிரமாக விவாதித்தனர்.

பின்னர், கிருபாநிதி விரிவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், கோவை போலீஸ் கமிஷனரை உடனடியாகமாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந் நிலையில், கோவை எம்பி ராதாகிருஷ்ணன் இவ் வழக்கில் தன்னுடைய நிலையை பிரதமரிடம் நேரில் எடுத்துக்கூற டில்லிக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து தற்போது இப் பிரச்சினை அரசியல் தலைவர்கள் மட்டத்தில் நேரடிப்பேச்சுவார்த்தையில் உள்ளது.

கோவையில் எம்பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பல சங்கங்கள், இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க. ஆகியவைபோராட்டத்தில் இறங்க திட்டமிட்டுள்ளன.

கைதாவா-ரா கோ-வை பார--தி-ய ஜன-தா எம்.-பி.?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X