"முழு உண்மையையும் சொல்லுப்பா! - குரோனியேவுக்கு நீதிபதி எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான அனைத்து உண்மைகளையும் முழுமையாகச் சொல்லுங்கள் என்று குரோனியேவுக்குவிசாரணைக் கமிஷன் அதிகாரி நீதிபதி எட்வின் கிங் கூறினார்.
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களுடன் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு லஞ்சம் பெற்றதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியதை குரோனியே ஒப்புக் கொண்டதை அடுத்து கேப்டன்பொறுப்பிலிருந்தும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். அவர் மீதானகுற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங் தலைமையில் தனி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.
ஏற்கெனவே, அக் கமிஷன் முன் ஆஜராகி குரோனியே வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரிடம் குறுக்குவிசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாட்களைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும்அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான அனைத்து உண்மைகளையும் முழுமையாகச் சொல்லுங்கள். இல்லையென்றால்உங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று குரோனியேவை நீதிபதி எட்வின் கிங் எச்சரித்தார்.
தற்போதுள்ள நிலையில், உங்களுடைய சாட்சியம்தான் முக்கியமானது. நீங்கள் முழு உண்மையையும்சொன்னால்தான் உங்களுக்கு நான் உதவி முடியும். நீங்கள் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் என்னால்எதுவும் செய்ய முடியாது.
நீங்கள் சொல்லும் உண்மையான முழுத் தகவல்களையும் வைத்துத்தான் உங்களுக்குச் சாதகமாக நான்அதிகாரிகளிடம் பேசமுடியும் என்று குரோனியேவிடம் கிங் கூறினார்.
தனது விசாரணையை முடித்து இம் மாதம் 30-ம் தேதி விசாரணை அறிக்கையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியத்திடம் நீதிபதி எட்வின் கிங் சமர்ப்பிக்க உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications