தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

இலங்கைக்கு இந்தியா உதவியிருக்க வேண்டும் என்கிறார் சுவாமி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிட இலங்கைக்கு இந்தியா ஆயுதங்கள் கொடுத்த உதவ மறுத்ததால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஆயுதங்கள்கொடுக்கின்றன என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே போர் வலுத்து வருகிறது. விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிட இந்தியாவிடம்இலங்கை அரசு உதவி கேட்டிருந்தது. ஆனால் இந்திய அரசு மறுத்து விட்டது.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கும் தைரியம் பிரதமர் வாஜ்பாய்க்கு இல்லை. ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஆயுதங்கள்கொடுத்து உதவுவதை பிரதமர் வாஜ்பாயால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இலங்கைக்கு இந்தியா 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகக் கூறியுள்ளது. இலங்கையில் அரசியல் சட்டத்தை மாற்றியமைத்து ஃபெடரல் ஆட்சி முறைகொண்டு வர வேண்டும். பாரபட்சமன்ற அரசாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து இந்தியா நிதியுதவிக்கு சம்மதம்தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற