தமிழகத்தில் இன்று
என்ன செய்யப் போகிறது நார்வே?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
வட கிழக்கு மாகாண இடைக்கால கவுன்சில் அரசில் விடுதலைப் புலிகளுக்கு இடம் தரமுடியாது என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பிடிவாதமாகஇருப்பதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே குழுவுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல்நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இடைக்கால கவுன்சிலில் விடுதலைப் புலிகள் இடம் பெறாவிட்டால் அது செயல்படுவது மிகவும் கடினம் என்று பல தமிழ்க் கட்சிகள் கருத்துத்தெரிவித்துள்ளன. வட கிழக்கு மாகாண நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளும் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், அது வெற்றி பெறாது என்றுஅரசியல் நிபுனர்கள் கூறியுள்ளனர். இப்போது இல்லாவிட்டாலும், பிறகாவது விடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சிலில் சேர்க்க வேண்டும்.
புலிகளுக்கு இடமில்லை என்ற தனது நிலைக்கு பெருமளவில் எதிர்ப்புக் கிளம்புவதை உணர்ந்த அதிபர் சந்திரிகா, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுஜனநாயகப் பாதைக்கு விடுதலைப் புலிகள் திரும்பினால், அவர்களை அரசில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழேபோட்டு விட்டு இடைக்கால கவுன்சில் அரசில் சேருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.
விடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சில் அரசில் சேர்க்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழ்ஈழ விடுதலை இயக்கம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
என்ன செய்யப் போகிறது நார்வே?
இதற்கிடையே, அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே நிலை மிகவும் கடினமானதாக மாறியிருக்கிறது.
தனது நிலையில் சந்திரிகா பிடிவாதமாக இருப்பதால், வரும் வாரங்களில் நார்வே நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் கடினமானதாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நார்வே மட்டுமல்லாது, இலங்கைப் பிரச்சினையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியுள்ளஇந்தியாவுக்கும் கூட இலங்கை அதிபரின் போக்கு ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.
இதற்கிடையே, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களில் அரசுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சுயேச்சையான தேர்தல் கமிஷன், போலீஸ் கமிஷன், அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை அமைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாக ஐலண்ட்நாளிதழலில் செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், ஜூலை மத்தியில் இலங்கை அமைதி உடன்பாடு குறித்த திட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications