தமிழகத்தில் இன்று
நான் ஏமாளி அல்-ல...மூப்-ப-னார் கூ-று-கி-றார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அரசியலில் நான் ஏமாளி அல்ல. சில நேரங்களில் ஏமாந்தது போல் நடிப்பேனே தவிரஏமாற மாட்டேன் என்று தமிழ் மாநி-ல காங்-கி-ரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.
துவண்டு கிடந்த தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கட்சிநடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார் மூப்பனார். மாநில, மாவட்ட வாரியாகமாநாடுகள் நடத்தி கட்சிப் பணிகளை வேகப்படுத்தி, -சட்-ட---ச--பை- தேர்தலுக்குகட்சியினரை தயார்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன் துவக்கமாக சென்னையில் த.மா.கா வின் முதல் மாணவர் மாநில மாநாடுநடைபெற்றது. காலை, மாலை என இரு வேளையும் நடைபெற்ற இம் மாநாட்டைகாலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில் த.மா.கா தயவில்லாமல் இனி யாராலும் ஆட்சி அமைக்க முடியாதுஎன்பதை தைரியிமாக மூப்பனார் அறிவிக்க வேண்டும். ஆட்சி அமைப்போம் என்றுசொல்பவர்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மால் தனித்து ஆட்சி அமைக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், தனித்துதான் ஆட்சி அமைப்போம்என்று சொல்பவர்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.
ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் கூட்டணி ஆட்சிக்குஜெயலலிதாவை கட்டுப்பட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாலையில் மாநாட்டு நிறைவுரை ஆற்றிய மூப்பனார், இதற்கு பதிலளிக்கும் வகையில்நான் ஒன்றும் ஏமாளி அல்ல என்று பேசினார்.
மூப்பனார் பேசியதாவது:
தேர்தல் வருவதற்கு முந்தைய மாநாடு இது தான். அரசியல் அயோக்கியர்கள் , ஊழல்வாதிகள் இருப்பதாக கூறுவர், இந்த குறைபாடுகளை களைந்து பொது வாழ்வில்,அரசியலில் ஈடுபட்டு நல்லவர்களாக,நல்ல சமுதாயத்தை உருவகாகுபவர்களாகமாணவர்கள் உயர வேண்டும்.
மாணவர்களை காமராஜர் வளர்த்தார். அதனால் நான் காங்கிரஸ் வளர்ந்தது. அதேபோல் உங்கள் வளர்ச்சியில் தான் த.மா.கா. வின் வளர்ச்சியும் உள்ளது.நீங்கள்தைரியமாக இருங்கள். அரசியைலைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்.அந்தப்பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்.
நான் இந்திரா காந்தியோடு இருந்து அரசியல் பயின்றவன். அரசியலை சமாளிக்கத்தெரியும். அரசியலில் புதிய பாதையை, புதிய கலாச்சாரத்தை உருவாக்கவிரும்புகிறேன். அந்த அடிப்படையில் நான் செ-யல்படுகிறேன்.
அதற்காக கொள்கையை விட்டுவிட முடியாது ஏற்றுக் கொண்டுள்ள கொள்கையில்உறுதியாக இருக்கிறேன்.அதற்காக் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளநான் மட்டுமல்ல நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு இந்தி.ய தேசியத்திற்கு நல்வாழ்வு கொடுக்க வேண்டும் என்றநம்பிக்கையின் அடிப்படையில் செய்ல்படுகிறேன். நாம் வெற்றி பெறுவோம் என்றநம்பிக்கை இருக்கிறுது. தைரி-யமாக இருங்கள்.
நான் ஏமாற மாட்டேன். ஆனால், ஏமாந்து விட்டதாக் நினைக்கக்கூடாது. உங்களுக்குநாட்டுக்கு கேடு வரும்படி எந்த செயலையும் செய்ய மாட்டேன்,
நல்ல தமிழகத்தை உருவாக்குகிற அடிப்படையில் எனது செய்லபாடுகள் இருக்கும்.அந்தப் பாதையில் .த.மா.கா. தொடர்ந்து செயல்படும் என்றார் மூப்பனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications