தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

தர-கர்-களை ஒ--ழித்-த உழவர் சந்தை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழ்நாட்டில் மே-லும் 53 உழவர் சந்தைகள் அமைக்-கப்-ப-டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள 47 உழவர் சந்தைகள் மூலம் ரூ 44.37 கோடிக்கு காய்கறிகள்விற்பனையாகியுள்ளது. அரசு அறிவித்தபடி 100 உழவர் சந்தைகள் என்ற இலக்கை அடைய மீதமுள்ள 53 உழவர்சந்தைகளையும் செப்டம்பர் மாதத்திற்குள் அமைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

முதல்வர் கருணாநிதியால் 14.11.1999 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் உழவர் சந்தை திட்டம்.தமிழ் நாடு முழுவதும் 100 உழவர் சந்தைகள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டு, இது வரை 47 உழவர் சந்தைகள்தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் காய்கறிகளை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக பொ-து-மக்களுக்-குவிற்கின்ற மகத்தான இலக்கை மையமாகக் கொண்ட திட்டம் இது.

இதுவரை இந்த உழவர் சந்தைகளில் ரூ 44,57 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. இத் திட்டத்தின் மூலம்விவசாயிகளுக்கு இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோரிடம் விற்று அதிக லாபம் அடைவதால்விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அது போல நுகர்வோர்கள் குறைந்த விலையில் அதிக காய்கறிகளையும், பசுமையான தரமுள்ள காய்கறிகளையும்வாங்கிச் செல்வதால் நுகர்வோரிடத்திலும் பேராதரவைப் பெற்றுள்ளது. உழவர் சந்தைக்குக் காய்கறிகளைக்கொண்டு வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் உழவர்களுக்கு தரமான விதைகளும், காய்கறிகளை சிறந்த முறையில் சாகுபடி செய்யப் பயிற்சியும்தரப்படுகின்றன. இதனால் காய்கறிகள் உற்பத்தியும், கீரைகளின் சாகுபடியும் அதிகரித்துள்ளன.

அரசு அறிவித்துள்ளபடி 100 உழவர் சந்தைகள் என்ற இலக்கை அடைய வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள53 சந்தைகளையும் திறக்க மாவட்டக் கலெக்டர்களுக்கு அரசால் உத்தரவிடப்பட்டு பணிகள் விரைந்துநடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் கூ றப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற