சிட்னி ஒலிம்பிக்: 4-வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா சீனா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பீஜிங்:
சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 4- வதுஇடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சீனா கடுமையாகப் போராட வேண்டிய நிலையில்உள்ளது.
1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சீனா 16 தங்கப்பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பெற்றது. ஆனால், சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கானஅணித் தேர்வில் பல வீரர்களும், வீராங்கனைகளும் எதிர்பார்த்த அளவுக்கு தங்களதுதிறமையைக் காண்பிக்கவில்லை.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க முடியாமல் போய்விடுமோ என்றுஅந் நாட்டு விளையாட்டுத் துறைத் தலைவர் கவலை அடைந்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக்கிலும் 16 தங்கப் பதக்கம் வெல்வது என்று சீனா இலக்குநிர்ணயித்திருந்தாலும், அட்லாண்டாவில் காட்டிய திறமையை சிட்னியில்காட்டமுடியுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் காட்டியதை விட கூடுதல் திறமையைக் காட்டினால்தான்சிட்னி ஒலிம்பிக்கில் 4-வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கு 16தங்கப் பதக்கங்களுக்கு மேல் வென்றாக வேண்டும். அதற்காக சீன வீரர்கள்போராடுவார்கள் என்று சீன ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் டு மிங்டேதெரிவித்தார்.
அட்லாண்டா ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில்தான் சீனாவுக்கு அதிக தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. ஆனால், சமீபத்திய போட்டிகளிலும், ஒலிம்பிக் தகுதிப்போட்டிகளிலும் சீன நீச்சல் வீரர்களும், வீராங்கனைகளும் தங்களது திறமைக்கும்குறைவாகவே செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சலுக்கு அடுத்து அதலெடிக்ஸ் போட்டிகளில் சீன வீரர்கள் அதிக பதக்கங்களைவென்றனர். ஆனால், சமீப காலமாக அதலெடிக் வீரர் மற்றும் வீராங்கனைகளும்திறமைக்கும் குறைவாகவே செயல்பட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications