அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

Subscribe to Oneindia Tamil

பேச்சு நடத்த இலங்கை வந்-துள்-ளார் நார்வே தூதர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசுடனும், முக்கிய எதிர்க்கட்சியுடனும்பேச்சு நடத்த நார்வே நாட்டின் சிறப்பு அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம் இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் விடுதலைப் புலிகள்ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த இரு மாதங்களாக புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடுமையானசண்டை நடந்து வருகிறது.

இந் நிலையில், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேஅமைதிப் பேச்சு நடத்த மத்தியஸ்தம் செய்ய நார்வே நாடு முன் வந்துள்ளது.

கடந்த மே மாதம், அதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள நார்வே நாட்டிலிருந்து எரிக் சோல்ஹீம்தலைமையில் ஒரு குழு வந்து இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்துப் பேசியது. பின்னர்இந்தியாவுக்கும் அக் குழு வந்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தியது.

அக் குழுவைத் தொடர்ந்து இப்போது நார்வே நாட்டின் சிறப்பு அமைதித் தூதராக எரிக் சோல்ஹீம் 3 நாள்பயணமாக செவ்வாய்க்கிழமை வந்தார். இவர் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கைஅரசுடனும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் பேச்சு நடத்துவார்.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக விடுதலைப் புலிகளைபேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+