அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
ஜுலை 4ம் தேதி வாஜ்பாய் தமிழகம் வருகிறார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பிரதமர் வாஜ்பாய் ஜூலை 4ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள "டைட்டல் பார்க் எனப்படும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப பூங்காவை பிரதமர்வாஜ்பாய் அடுத்த மாதம் 4ம் தேதி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக அவர் 4ம் தேதி காலை சென்னை வருகிறார்.
சென்னை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் அவர் தூத்துக்குடி அருகில் உள்ள கயத்தாறு செல்கிறார். அங்குஅமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 15 மெகாவாட்உற்பத்தித் திறன் கொண்ட இந்த காற்றாலை மின் உற்பத்தி மையத்தில் உள்ள மின் திட்ட ஆராய்ச்சி நிலையத்தையும் பிரதமர்திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் கலெக்டர் மாலிக் பெரோஸ்கான், மாவட்ட போலீஸ்கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் செவ்வாய்க் கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


Click it and Unblock the Notifications
